அனுபவத்தில் தானே அறிவு பிறக்கின்றது – நயன்தாரா

0
98

நடிகை நயன்தாரா வெற்றிப் பட இயக்குநர்களின் காம்பினேஷனில் முன்னணி நடிகர்களுடன் இணைந்து படங்களில் கமிட்டாகி வருகிறார்.

நிலேஷ் கிருஷ்ணா இயக்கத்தில் நயன்தாரா மற்றும் ஜெய், சத்தியராஜ் உள்ளிட்ட பல நடிகர்களின் நடிப்பில் கடந்த முதலாம் திகதி திகதி அன்னபூரணி திரைப்படம் வெளியாகி வெற்றி நடை போடுகின்றது. இந்தப் படம் நயன்தாராவின் 75வது படம் என்ற பெருமையுடன் வெளியாகியுள்ளது.

திரைப்படம் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்ற போதிலும் ரசிகர்களை கவர தவறவில்லை. பிராமண குடும்பத்தில் பிறந்த நாயகி, செஃப் ஆவதற்காக மேற்கொள்ளும் முயற்சிகளை மையமாக கொண்டு இந்தப் படம் வெளியாகியுள்ளது.

ஆயினும் படத்திற்கு சரியான பிரமோஷன்கள் செய்யப்படவில்லை என்று பரவலாக குற்றச்சாட்டு வைக்கப்பட்டது. படத்தில் அன்னபூரணியாக நடித்துள்ளார் நயன்தாரா. மேலும் நடிகர் ஜெய் ஃபர்ஹானாவாகவும் சத்யராஜ் செஃப் ஆனந்தாகவும் நடித்துள்ளார்.

மேலும் படத்தில் கேஎஸ் ரவிக்குமார், ரெடின் கிங்ஸ்லி, ரேணுகா, சச்சு, சுரேஷ் சக்ரவர்த்தி, பூர்ணிமா ரவி, முகமது இர்ஃபான், திடியன் ஆகியோரும் முக்கியமான கேரக்டர்களில் நடித்துள்ளனர். படம் வெளியாகி முதல் சில தினங்களிலேயே கோடிகளில் வசூல் செய்துள்ளது.

இந்நிலையில் தற்போது இவர்கள் இருவரும் கூட்டாக இணைந்து நீண்ட காலங்களுக்கு பிறகு பேட்டி அளித்துள்ளனர். சினிமாதான் தன்னுடைய வாழ்க்கையில் அனைத்தையும் கொடுத்துள்ளதாக அந்த பேட்டியில் நயன்தாரா நெகிழ்சசியை வெளிப்படுத்தியுள்ளார்.

தனக்கு அதிகப்படியான பெயர், பணம், மரியாதை ஆகியவற்றை சினிமாதான் கொடுத்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும் படங்களில் தனக்கு அப்பா என்றால் அது சத்யராஜ்தான் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.