யாழில் மயானத்தையும் விட்டு வைக்காத கள்வர்கள்!

0
113

யாழில் வட்டுக்கோட்டை வழுக்கையாறு இந்து மயானத்தின் தகன மேடையில் இருந்த இரும்பு தூண்கள் திருடப்பட்டுள்ள சம்பவம் மக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் இரும்புத் தூண்கள் இல்லாமையினால் சடலங்களை எரியூட்டுவதில் மிகுந்த சிரமம் காணப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேவேளை கடந்த சில தினங்களுக்கு முன்னர் மயானத்தில் பொருத்தியிருந்த மின் குமிழ்களையும் திருடர்கள் திருடிச் சென்றுள்ளதாக கூறப்படுகின்றது.

இந்த திருட்டு சம்பவங்கள் தொடர்பில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கவனத்தில் எடுத்து மயானத்தின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.