ஜனாதிபதியை சந்தித்த தமிழ் உணர்வாளர் அமைப்பின் தலைவர்

0
111

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கும், தமிழ் உணர்வாளர் அமைப்பு தலைவரும் ரணில் 2024 செயலணி தலைவருமான கணபதிப்பிள்ளை மோகனுக்கும் இடையிலான சந்திப்பொன்று இடம்பெற்றது. இந்த சந்திப்பு ஜனாதிபதி இல்லத்தில் நேற்று முன்தினம் இடம்பெற்றது.

“மட்டக்களப்பு மாவட்டத்தில் வறுமை கோட்டுக்கு கீழ் வாழும் மக்களுக்கான வீடுகளை புனரமைக்க சுமார் 1 இலட்சத்து 50 ஆயிரம் ரூபாவும் மலக்கூடங்களை புனரமைக்க 50 ஆயிரம் ரூபாவும் வழங்க தீர்மானிக்கப்பட்டது. இதன் முதற்கட்ட நடவடிக்கையாக 450 பயனாளிகள் பயனடையவுள்ளனர்.

மேலும் இஸ்ரேல் நாட்டுக்கு தொழில்பெற 50 பேருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது என தமிழ் உணர்வாளர் அமைப்பின் தலைவர் மோகன் தெரிவித்தார்.