சித்தார்த் ஆனந்த் இயக்கத்தில் ஹ்ரித்திக் ரோஷன், தீபிகா படுகோன், அனில் கபூர் நடிப்பில் உருவாகி உள்ள ஃபைட்டர் படத்தின் அட்டகாசமான டீசர் தற்போது வெளியாகி உள்ளது.
இந்த படம் அடுத்த ஆண்டு ஜனவரி 25ஆம் திகதி குடியரசு தின வெளியீடாக ரிலீஸ் ஆகிறது. படத்தின் டீசர் காட்சிகள் அனைத்துமே ஆர்வத்தை தூண்டும் விதமாக உள்ளன.
இந்த ஆண்டு டாம் க்ரூஸ் நடிப்பில் வெளியான டாப் கன் திரைப்படத்தில் ஃபைட்டர் ஜெட் காட்சிகள் நிறைந்திருந்தன. அதே போல இந்த ஃபைட்டர் படமும் பெயரை போலவே ஃபைட்டர் ஜெட் படமாகவே உருவாகி உள்ளது.
ஹ்ரித்திக் ரோஷன் டாம் க்ரூஸுக்கே டஃப் கொடுப்பது போல ஃபைட்டர் ஜெட் ஓட்டும் காட்சிகளில் நடித்துள்ளார். தற்போது வரை 825,366 பார்வையாளர்களையும் கடந்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.