முன்னாள் பிரதி பொலிஸ் மா அதிபர் நாலக டி சில்வா விடுதலை

0
112

பயங்கரவாத விசாரணைப் பிரிவின் (TID) முன்னாள் பிரதி பொலிஸ் மா அதிபர் நாலக டி சில்வா கோட்டை நீதவான் நீதிமன்றத்தினால் விடுவிக்கப்பட்டுள்ளார்.

2019 ஆம் ஆண்டு இடம்பெற்ற படுகொலை சதித்திட்டம் தொடர்பான வழக்கில் இருந்தே அவர் விடுவிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மேலும், குற்றம் சாட்டப்பட்டவருக்கு எதிரான சாட்சியங்கள் போதுமானதாக இல்லை என சட்டமா அதிபர் தெரிவித்ததையடுத்து, அவர் இந்த வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,

 2018ஆம் ஆண்டு அப்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ ஆகியோரைக் கொலை செய்வதற்கு சதித்திட்டம் தீட்டிய குற்றச்சாட்டில் நாலக டி சில்வா கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டார்.

இதன்போது ​​அவர் படுகொலைச் சதித்திட்டத்துடன் தொடர்புடையவர் என்பதை நிரூபிப்பதற்கான சாட்சியங்கள் போதுமானதாக இல்லையென தெரிவித்து அவர் விடுவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.