மாணவர்கள் தொடர்பில் கல்வி அமைச்சர் அதிர்ச்சித் தகவல்!

0
118

இலங்கையில் பிறப்பு சதவீதம் குறைந்துள்ளமையால், பாடசாலைகளுக்கு உள்ளீர்க்கும் மாணவர்களின் எண்ணிக்கை 50 ஆயிரமாக குறைந்துள்ளதாக கல்வி அமைச்சர் கலாநிதி சுசில் பிரேமசந்திர தெரிவித்துள்ளார்.

பாடசாலைகளுக்கு 5 வயது நிறைவடைந்தவுடன் மாணவர்களாக உள்ளீர்க்கும் செயற்பாடு முன்னெடுக்கப்படுகின்றது.

பாடசாலைகளுக்கு தற்போது உள்ளீர்க்கும் பிள்ளைகளின் எண்ணிக்கை 2 இலட்சத்து 90 ஆயிரம் பேராக உள்ளது.

இருப்பினும், 10 வருடங்களுக்கு முன்னர், பாடசாலைகளுக்கு 3 இலட்சத்து 40 ஆயிரம் பிள்ளைகள் உள்ளீர்க்கப்பட்டிருந்தாக அவர் சுட்டிகாட்டியுள்ளார்.

நாடாளுமன்றத்தில் நடைபெற்றுக்கொண்டிருக்கும் கல்வியமைச்சு மீதான குழுநிலை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.