இலங்கையில் 1974ம் ஆண்டு 191 பேர் உயிரிழந்த பயங்கர விமான விபத்து! 49 வருடங்கள் நிறைவு

0
183

1974ம் ஆண்டு டிசம்பர் மாதம் 4ம் திகதி இரவு 10.10க்கு மஸ்கெலியா நோட்டன் பிரிட்ஜ் – தெப்பட்டன் பகுதியில் விமானம் ஒன்று விபத்துக்குள்ளாகி 191 பேர் உயிரிழந்தார். 

இவ்விபத்து இடம்பெற்று நேற்றுடன் 49 வருடங்கள் நிறைவடைந்துள்ளது.

இந்தோனேசியா – சுராபயாவில் இருந்து 182 ஹஜ் பயணிகளை ஏற்றிக்கொண்டு மக்கா நோக்கிச் சென்ற மார்டின் எயார் டீ.சீ 8 ரக பயணிகள் விமானம் ஒன்றே இவ்வாறு, சப்த கன்னியா என அறியப்படும் ஏழு கன்னியர் மலையின் 5 வது குன்றின் மீது மோதி சிதறியது.

இதன்போது விமானத்திலிருந்த விமானிகள் உட்பட 191 பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

இதனையடுத்து, உயிரிழந்த 190 பேர் தெப்பட்டன் தோட்ட கொத்தலென பகுதியிலேயே புதைக்கப்பட்டனர்.

அடையாளம் காணக்கூடியவாறு இருந்த விமானப் பணிப் பெண்ணின் உடலை மட்டும் அவரின் காதலர் ஹெலிகொப்டர் மூலமாக இந்தோனேசியாவுக்கு கொண்டு சென்றார்.

இதேவேளை, விபத்துக்குள்ளான விமான பாகங்களில் எஞ்சியிருக்கும் இரண்டு டயர்கள் மட்டும் இதுவரை பாதுகாக்கபட்டு வருகின்றது.

ஒரு டயர் நோட்டன் பொலிஸ் நிலையத்தில் உள்ளது. நல்ல நிலையிலிருக்கும் டயர் நோட்டன் விமலசுரேந்திதர அணைக்கட்டுக்கும் செல்லும் வழியில் சம்பவங்ளை சுருக்கமாக தாங்கி பார்வைக்காக காட்சியப்படுத்தப்பட்டுள்ளது.

விமானத்தின் கருப்புப்பெட்டி தகவலின் படி தொழில்நுட்ப கோளாறு காரணமாகவே இவ் விமானம் விபத்துக்குள்ளாகியுள்ளது.

இலங்கையைப் பொறுத்தவரை இதுவரை வெளிநாட்டு விமானம் ஒன்றுக்கு ஏற்பட்ட மிக மோசமான விபத்து இதுவாகும்.