அனுராதபுரத்தில் கோர விபத்து; தந்தை உயிரிழப்பு! தாய் – மகள் வைத்தியசாலையில்..

0
125

அனுராதபுரம் பாதெனிய வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த விபத்து சம்பவம் நேற்றைய தினம் (04-12-2023) அம்பன்பொல பேருந்து நிலையத்திற்கு அருகில் இடம்பெற்றுள்ளது.

விபத்து தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

பாதெனியவிலிருந்து அனுராதபுரம் நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிள், கிளை வீதியிலிருந்து பிரதான வீதியை நோக்கி பயணித்த மற்றுமொரு மோட்டார் சைக்கிளுடன் மோதியதில் அதன் ஓட்டுனர் தூக்கி எறியப்பட்டு எதிர்திசையில் வந்த மோட்டார் வானத்தில் மோதுண்டு இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

விபத்தின் போது குறித்த நபரின் மனைவி மற்றும் மகளும் மோட்டார் சைக்கிளில் பயணித்துள்ளதுடன் அவர்கள் காயமடைந்து அம்பன்பொல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் மேலதிக சிகிச்சைக்காக குருநாகல் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

அனுராதபுரத்தில் பயங்கர விபத்து: ஒருவர் பரிதாபமாக உயிரிழப்பு! மனைவி - மகள் வைத்தியசாலையில் | One Person Died In Accident In Anuradhapura

இந்த விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த மஹவ பிரதேசத்தைச் சேர்ந்த 35 வயதுடைய நபரே உயிரிழந்துள்ளார்.

மற்றைய மோட்டார் சைக்கிளின் ஓட்டுனரும் காயமடைந்து அம்பன்பொல வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.

விபத்து தொடர்பில் மோட்டார் வாகனத்தின் சாரதி அம்பன்பொல பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.