அஸ்வெசும நலன்புரி பயனானிகளுக்கு வெளியான அறிவிப்பு!

0
160

அஸ்வெசும நலன்புரி கொடுப்பனவு திட்டத்தின் கீழ் தெரிவுசெய்யப்பட்ட பயனாளிகளுக்கான கடந்த ஒக்டோபர் மாதத்திற்கான கொடுப்பனவு இன்றைய தினம் (05-12-2023) முதல் வங்கிக் கணக்குகளில் வைப்பிலிடப்பட்டுள்ள தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த திட்டத்தின் கீழ் 14 இலட்சத்து 6 ஆயிரத்து 932 குடும்பங்களுக்கு ஒக்டோபர் மாதத்திற்கான கொடுப்பனவுக்காக 8,775 மில்லியன் ரூபா வங்கிகளுக்கு விடுவிக்கப்பட்டுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.

இது குறித்து ராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க டுவிட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

அதற்கமைய, இன்று முதல் பயனாளிகளின் வங்கிக் கணக்குகளில் பணம் வைப்பிலிடப்படும் எனவும் நிதி இராஜாங்க அமைச்சர் தெரிவித்துள்ளார்.