பேனா வடிவில் துப்பாக்கி.. மறைந்து வைத்திருந்த நபர் கைது!

0
118

யக்கலவில் பேனா வடிவிலான சிறிய துப்பாக்கியை வைத்திருந்த நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

அத்துடன் துப்பாக்கியின் உரிமையாளரும் பொலிஸ் விசேட அதிரடிப்படை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கண்டுபிடிக்கப்பட்ட துப்பாக்கி 09 மில்லி மீற்றர் தோட்டாக்களை சுடும் திறன் கொண்ட வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட என அதிரடிப்படையினர் தெரிவித்துள்ளனர்.

சந்தேக நபர்கள்

நேற்று கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் 29 மற்றும் 33 வயதுடைய கம்பஹா, யக்கல பிரதேசத்தை சேர்ந்தவர்களாகும்.

சந்தேக நபர்கள் மேலதிக விசாரணைகளுக்காக யக்கல பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.