ஒரு மாத காலத்திற்கு இடைநிறுத்தப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள்

0
183

இராஜாங்க அமைச்சர் டயனா கமகே, ஐக்கிய மக்கள் சக்தியின்  நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹன பண்டார மற்றும் சுஜித் சஞ்சய ஆகியோர் நாடாளுமன்ற செயற்பாடுகளில்  இருந்து ஒரு மாத காலத்திற்கு இடைநிறுத்தப்பட்டுள்ளனர்.

நூலக வளாகத்தில் வாக்குவாதம்

ஒக்டோபர் 20ஆம் திகதி  அன்று நாடாளுமன்ற நூலக வளாகத்தில் மேற்குறிப்பிட்ட மூவரும் வாக்குவாதத்தில் ஈடுபட்ட சம்பவம் சர்ச்சைகளை ஏற்படுத்தியிருந்த நிலையில், தற்போது அவர்கள் நாடாளுமன்ற செயற்பாடுகளில் இருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளனர்.

நாடாளுமன்றத்தில் இருந்து ஒரு மாத காலத்திற்கு இடைநிறுத்தப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர்கள் | Mps To Be Suspended From Parliament

நாடாளுமன்ற உறுப்பினர் சமல் ராஜபக்சவினால் சமர்ப்பிக்கப்பட்ட நாடாளுமன்ற சிறப்புரிமைகள் குழுவின் அறிக்கையிலேயே இந்த இடைநிறுத்த உத்தரவு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.