மாவீரர் நினைவு நாளில் பிரித்தானிய பாராளுமன்றில் ஒளிர்ந்த கார்த்திகை பூ

0
117

மாவீரர் நினைவு நாளினை முன்னிட்டு பிரித்தானியாவின் பாராளுமன்ற கட்டடத்தொகுதியில் லேசர் கதிர் ஒளிக்கற்றைகள் மூலம் பிரமாண்டமான கார்த்திகை பூ ஒளிரவிடப்பட்டது.

மாவீரர் நினைவு நாள் உலகமெங்குமுள்ள தமிழர்களால் நேற்று அனுஷ்டிக்கப்பட்ட நிலையில் பிரித்தானியாவில் உள்ள தமிழ் மக்களின் முயற்சியால் தமிழீழத்தின் தேசிய மலரான காந்தழ் பூ பிரித்தானிய பாராளுமன்ற கட்டடத்தொகுதியில் ஒளிரவிடப்பட்டது.

இலங்கையில் இடம்பெற்ற இனப்படுகொலையிலிருந்து சுதந்திரத்திற்காகா போராடிய மாவீரர்களை நினைவுக் கொள்ளும் வகையில் பிரமாண்டமாக ஒளிரவிடப்பட்ட கார்த்திகை மலரை பார்த்து எல்லோரும் மெய்சிலிர்த்து நின்றனர்.

இதேவேளை கடனா, அமெரிக்கா, அவுஸ்ரேலியா, சுவிட்சர்லாந்து, பிரான்ஸ் உட்பட புலம்பெயர் தமிழ் மக்கள் வாழும் அனைத்து நாடுகளிலும் மாவீரர் தின நிகழ்வுகள் இம்முறை சிறப்பாக அனுஷ்டிக்கப்பட்டமையும் சுட்டிக்காட்டத்தக்கது.