முன்னாள் பேரரசர் நெப்போலியன் போனபார்ட் அணிந்த தொப்பி 2.1 மில்லியன் அமெரிக்க டொலர்களுக்கு ஏலம்!

0
132

பிரான்ஸ் நாட்டின் முன்னாள் பேரரசர் நெப்போலியன் போனபார்ட் பயன்படுத்திய தொப்பி 2.1 மில்லியன் அமெரிக்க டொலர்களுக்கு பிரான்ஸின் பாரிஸில் நடைபெற்ற ஏலத்தில் ஏலம் இடப்பட்டுள்ளது.

இது இலங்கை ரூபாயில் சுமார் 68 கோடி என தெரிவிக்கப்படுகிறது. இந்த தொப்பி 1769ஆம் ஆண்டு முதல் 1821ஆம் ஆண்டு வரை பேரரசர் நெப்போலியன் அணிந்திருந்தார்.

பிரெஞ்சுக் கொடியின் நீலம் – வெள்ளை – சிவப்பு வண்ணங்களைக் கொண்ட கருப்பு தொப்பி உலகெங்கிலும் உள்ள கலைப்பொருட்கள் சேகரிப்பாளர்களின் ஆர்வத்தை ஈர்த்துள்ளது என்று வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன. ஆனால் தொப்பியை வாங்கியவர் யார்? என்ற விவரத்தை ஏலதாரர் வெளியிட விரும்பவில்லை.

இந்த தொப்பி 655000 ரூபாயிலிருந்து – 873000 ரூபாய் அமெரிக்க டொலர்களுக்கு ஏலம் போகும் என மதிப்பிடப்பட்டிருந்த போதிலும் அதனை விட இரண்டு மடங்குக்கும் அதிகமான தொகைக்கு தொப்பி விற்பனை செய்யப்பட்டுள்ளது.

நெப்போலியன் போனபார்ட்டிடம் 15 ஆண்டுகளில் இதுபோன்ற 120 தொப்பிகள் இருந்ததாகவும், அவற்றில் பெரும்பாலானவை தற்போது தொலைந்துவிட்டதாகவும் ஏலதாரர்கள் தெரிவித்தனர்.

தொப்பி நெப்போலியன் போனபார்ட்டின் உருவத்தை பிரதிபலிக்கிறது என்றும் தொப்பியின் கடைசி உரிமையாளரான தொழிலதிபர் ஜீன் லூயிஸ் நொய்சிஸ் ஒரு வருடத்துக்கு முன்பு உயிரிழந்துவிட்டார் என்றும் வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.