சீனி விலை தொடர்பில் அரசாங்கத்தின் தீர்மானம்..

0
227

சீனிக்கு விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாட்டு விலையை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும் என வர்த்தக அமைச்சர் நளீன் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

இதன்படி சதொச மற்றும் கூட்டுறவு விற்பனை நிலையங்கள் ஊடாக ஒரு கிலோ சீனியை 275 ரூபாவிற்கு விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

சீனிக்கான அதிகபட்ச சில்லறை விலையை நிர்ணயிக்கும் வர்த்தமானி அறிவிப்பை கடந்த 3ஆம் திகதி நுகர்வோர் விவகார அதிகாரசபை வெளியிட்டிருந்தது.

விற்பனை நடவடிக்கை 

இதன்படி, பொதியிடப்படாத ஒரு கிலோ வெள்ளை சீனியின் அதிகபட்ச சில்லறை விலை 275 ரூபாவாகவும், பொதி செய்யப்பட்ட ஒரு கிலோ சீனிக்கு 295 ரூபாவாகவும் நிர்ணயம் செய்யப்பட்டது.

சீனி விலை தொடர்பில் அரசாங்கம் எடுத்துள்ள தீர்மானம் | Remove Price Controls On Sugar

மேலும், பொதி செய்யப்படாத ஒரு கிலோ சிவப்பு சீனியின் அதிகபட்ச சில்லரை விலை 330 ரூபாவாகும், பொதி செய்யப்பட்ட ஒரு கிலோ சிவப்பு சீனியின் அதிகபட்ச சில்லரை விலை 350 ரூபாவாகவும் நிர்ணயம் செய்யப்பட்டது.

இந்நிலையில், சதொச மற்றும் கூட்டுறவு விற்பனை நிலையங்கள் ஊடாக ஒரு கிலோ சீனியை 275 ரூபாவிற்கு விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என வர்த்தக அமைச்சு தெரிவித்துள்ளது.