ராஜபக்சர்களின் சொத்துக்களை பறிமுதல் செய்யுங்கள்; சந்திரிகா குமாரதுங்க கோரிக்கை

0
149

நாட்டை வங்குரோத்து செய்தமைக்காக நீதிமன்றினால் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டுள்ள நபர்களின் சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட வேண்டுமென முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க தெரிவித்துள்ளார்.

அதற்காக உலக வங்கியின் விசேட பிரிவு ஒன்று ஸ்தாபிக்கப்பட்டுள்ளதாகவும் அதற்கு உலக வங்கியின் ஆதரவைப் பெற முடியும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

பணம் கிடைத்தவுடன் இலங்கையின் பொருளாதாரத்திற்கு பயன்படுத்த முடியும் எனவும் இலங்கையின் கடனை அடைக்க முடியும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

பொருளாதார வீழ்ச்சி

நாட்டின் பொருளாதாரம் வீழ்ச்சியடைந்ததற்கு முன்னாள் ஜனாதிபதிகளான மகிந்த ராஜபக்ச, கோட்டாபய ராஜபக்ச, முன்னாள் நிதி அமைச்சர் பசில் ராஜபக்ச உட்பட 7 பேர் காரணம் என உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

ராஜபக்சர்களின் சொத்துக்களை பறிமுதல் செய்யுமாறு கோரிக்கை | Request To Confiscate Rajapaksa Families Property

தற்போது அந்த ஏழு பேரின் குடியுரிமையை இரத்து செய்ய வேண்டும் என எதிர்க்கட்சிகள் நாடாளுமன்றத்தில் யோசனை முன்வைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது..