இலங்கை இந்தியாவுக்கு இடையிலான கூட்டு இராணுவப் பயிற்சியின் ஒன்பதாவது பதிப்பு ஆரம்பம்

0
154

மித்ரா சக்தி 2023 என்ற இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான கூட்டு இராணுவப் பயிற்சியின் ஒன்பதாவது பதிப்பு புனேவில் நேற்று தொடங்கியது.

இரண்டு தரப்பு துருப்புக்களிடையே ஒரு மேம்பட்ட அளவிலான இயஙகுநிலையை அடைவதில் கவனம் செலுத்தும் வகையில் இந்த பயிற்சிகள் அமையும் என்று இந்திய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

காலாட்படை

120 வீரர்களைக் கொண்ட இந்தியக் குழுவில் முக்கியமாக மராத்தா காலாட்படை படைப்பிரிவின் துருப்புக்கள் பிரதிநிதித்துவப்படுத்தப்படுகின்றன என்று இந்திய பாதுகாப்பு அமைச்சகம் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.

இலங்கை தரப்பில் 53 வது காலாட்படை பிரிவின் வீரர்கள் பிரதிநிதித்துவப்படுத்தப்படுகிறார்கள்.

இந்திய விமானப்படையைச் சேர்ந்த 15 பேரும், இலங்கை விமானப்படையைச் சேர்ந்த ஐந்து வீரர்களும் இந்தப் பயிற்சியில் பங்கேற்கின்றனர் என்றும் இந்திய பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.