உலகக் கோப்பையை இந்தியா வென்றுவிட்டால் நிர்வாணமாக ஓடுவேன்; பிரபல நடிகை

0
118

பிரபல தெலுங்கு நடிகை ரேகா போஜ் திடீரென அறிவிப்பு ஒன்றை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளார். அதாவது அவர் தனது ‘இன்ஸ்டாகிராம்’ பக்கத்தில், ‘உலகக்கோப்பையை இந்தியா வென்றுவிட்டால் விசாகப்பட்டினம் கடற்கரையில் நான் நிர்வாணமாக ஓடுகிறேன்’ என தெரிவித்துள்ளார்.

13-வது உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி

இந்தியாவில் நடந்து வரும் 13-வது உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டித்தொடர் உச்சகட்டத்தை எட்டியுள்ள நிலையில் இந்திய அணி இறுதி போட்டிக்கு நுழைந்திருக்கிறது.

உலகக்கோப்பையை இந்தியா வென்றுவிட்டால் நிர்வாணமாக ஓடுவேன்; பிரபல நடிகை | I Will Run Naked If India Wins The World Cup

அகமதாபாத்தில் நாளை மறுநாள் (ஞாயிற்றுக்கிழமை) நடைபெறும் இறுதி போட்டியில் ஆஸ்திரேலியாவை இந்தியா எதிர்கொள்கிறது. இந்த முறை கோப்பை நமக்கு தான் என்று இந்திய ரசிகர்கள் உற்சாகத்தில் திளைத்துள்ளனர்.

இந்தநிலையில் தெலுங்கு நடிகை ரேகா போஜ் மேற்படி அறிவிப்பை விடுத்துள்ளார். நடிகை ரேகா போஜ் கருத்தை பார்த்த ரசிகர்கள் சுயவிளம்பரத்திற்காக இப்படி ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளார் என விமர்சித்துள்ளனர். ஆனால் ரேகா போஜ் இதை மறுத்து, ‘இந்திய கிரிக்கெட் அணி மீதான அன்பால் இதனை செய்கிறேன்’ என்று பதில் அளித்துள்ளார். 

உலகக்கோப்பையை இந்தியா வென்றுவிட்டால் நிர்வாணமாக ஓடுவேன்; பிரபல நடிகை | I Will Run Naked If India Wins The World Cup

ஏற்கனவே 2011-ம் ஆண்டில் உலகக்கோப்பையை இந்திய அணி வென்றால் கிரிக்கெட் மைதானத்தில் நான் நிர்வாணமாக ஓடுவேன் என்று நடிகை பூனம் பாண்டே தெரிவித்து பரபரப்பு ஏற்படுத்தியிருந்தார்.

ஆனால் இந்திய அணி வெற்றிபெற்ற நிலையில் பூனம் பாண்டே அமைதியாகி போனார் என்பதும் ரசிகர்கள் அப்போது கிண்டல் அடித்ததும் குறிப்பிடத்தக்கது