2024ஆம் ஆண்டின் முதல் சில மாதங்கள் கடினமானவையாக அமையும்..ரணில் பகிரங்க அறிவிப்பு

0
143

2024ஆம் ஆண்டின் முதல் சில மாதங்கள் மிகவும் கடினமானவையாக அமையும். அதன் பின்னர் சிறிது சிறிதாக எம்மால் மீண்டெழ முடியும். இந்த வருடத்தில் உள்நாட்டு உற்பத்தியில் ஓரளவு இலக்கை அடைந்துள்ளோம் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். 

தொடர்ந்தும் அவர் குறிப்பிடுகையில்,

எனினும், 2018ஆம் ஆண்டின் அப்போதைய நிலைமைக்கு வரவில்லை. அடுத்த வருடத்திலும் அவ்வாறானதொரு நிலைமை ஏற்படாது. பொருளாதார நெருக்கடியின் காரணமாக 1985ஆம் ஆண்டு ஏற்பட்ட நிலைமையை நாங்கள் அடைந்துள்ளோம்.

அரச ஊழியர்களின் கொடுப்பனவு

2025ஆம் ஆண்டில் இருந்தே எமது பயணத்தை ஆரம்பிக்க வேண்டியுள்ளது. அதற்கு நாம் அனைவரும் தயாராக வேண்டும்.

இதேவேளை, கடந்த ஒன்றரை அல்லது இரண்டு மாதங்களுக்கு முன்னர் அரச ஊழியர்களுக்கு 10 ஆயிரம் ரூபா கொடுப்பனவை அதிகரிக்க தீர்மானித்தோம்.

இலங்கையர்கள் சந்திக்கப் போகும் மிகக் கடினமான காலம்: ரணிலின் பகிரங்க அறிவிப்பு | Budget 2024 Sri Lanka Ranil

எனினும் அந்த முயற்சி சற்று பின்னடைவை சந்தித்தது. முதலில் நாங்கள் சம்பள அதிகரிப்பை வழங்கமாட்டோம் என தொழிற்சங்கங்கள் எண்ணின.

இறுதியில், இதனையும் வழங்கமாட்டோம் என எண்ணி அவர்கள் தொழிற்சங்க நடவடிக்கையில் இறங்க ஆரம்பித்தனர்.

10ஆயிரம் ரூபா என தெரிந்த பின்னர் வீதியில் இறங்கி போராடி 20 ஆயிரம் ரூபா வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். அதுவே நடந்தது.

10 ஆயிரம் ரூபா நிச்சயமாக வழங்கப்படும் என்பதை அவர்கள் அறிந்திருந்தனர். சம்பளத்தை நான் அதிகரிப்பதாக கூறியதன் பின்னரே அவர்கள் இருபதாயிரம் ரூபாவை கோரினர் என தெரிவித்துள்ளார்.