முள்ளிவாய்க்கால் தூபி குறித்து முகநூலில் பதிவு: யாழ் பேராசிரியர்கள் இருவர் பொலிஸில் முறைப்பாடு!

0
199

யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் உள்ள முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி குறித்து முகநூலில் போடப்பட்ட பதிவு தொடர்பாக நபரொருவருக்கு எதிராக பல்கலைக்கழக பேராசிரியர்கள் இருவரால் பொலிஸில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் பணியாற்றி தற்பொழுது கொழும்பு பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவில் கடமையாற்றும் சண்முகநாதன் பிரதீபன் என்ற நபருக்கு எதிராகவே இணைய வழி ஊடாக பொலிஸ் மா அதிபருக்கும்( Tell To IGP) யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்திலும் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.

முகநூலில் முள்ளிவாய்க்கால் தூபி குறித்த பதிவு: யாழ் பேராசிரியர்கள் இருவர் பொலிஸில் முறைப்பாடு! | Jaffna University Mullivaaikkal Memorial Facebook

இதன் அடிப்படையில் குறித்த நபரை காங்கேசன்துறையில் உள்ள பொலிஸாரின் தகவல் தொழில்நுட்ப பிரிவு அலுவலகத்துக்கும் யாழ் பொலிஸ் நிலையத்திற்கும் விசாரணைக்கு ஆஜராகுமாறு பொலிஸாரால் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

யாழ் பல்கலைக்கழகத்தில் உள்ள முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி குறித்து யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் விரிவுரையாளர் உள்ளிட்ட இருவர் மேற்கொண்ட முறைப்பாடுகளையடுத்து அது தொடர்பில் இலஞ்சம் மற்றும் ஊழல் பற்றிய முறைப்பாடுகளை விசாரணை செய்வதற்கான ஆணைக்குழு விசாரணைகள் ஆரம்பித்துள்ளதாக செய்திகள் வெளியாகியிருந்தது.

இதன்படி இவ்விடயம் தொடர்பில் போடப்பட்ட முகநூல் பதிவு தொடர்பாகவே பொலிஸ் விசாரணைகளை மேற்கொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

முகநூலில் முள்ளிவாய்க்கால் தூபி குறித்த பதிவு: யாழ் பேராசிரியர்கள் இருவர் பொலிஸில் முறைப்பாடு! | Jaffna University Mullivaaikkal Memorial Facebook