சினிமா ஹீரோயின்களுக்கு நிகராக தற்போது சின்னத்திரை நடிகைகளுக்கும் ரசிகர்கள் இருக்கிறார்கள். அப்படி செம்பருத்தி என்ற ஒரே சீரியலில் ஏராளமான ரசிகர்களை ஈர்த்தவர் தான் ஷபானா.
அவர் செம்பருத்தி சீரியல் முடிந்தபிறகு தற்போது சன் டிவியின் மிஸ்டர் மனைவி என்ற சீரியலில் அவர் நடித்து வருகிறார்.
குழந்தை பருவ போட்டோ
ஷபானா இரண்டு வருடங்களுக்கு முன்பு பாக்கியலட்சுமி சீரியல் புகழ் நடிகர் ஆர்யன் என்பவரை காதல் திருமணம் செய்து கொண்டார். சில தினங்களுக்கு முன்பு தான் அவர்கள் இரண்டாம் திருமண நாளை கொண்டாடி இருந்தனர்.
தற்போது ஷபானா அவரது குழந்தை பருவ போட்டோவை வெளியிட்டு இருக்கிறார். பள்ளியில் எடுத்த குரூப் போட்டோவில் அவர் எப்படி இருக்கிறார் என பாருங்க..