800 கோடியைக் கடந்த உலக மக்கள்தொகை; அமெரிக்கா தகவல்

0
146

உலக மக்கள்தொகை 800 கோடியைக் கடந்து உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்க மக்கள் தொகை கணக்கெடுப்பு நிலையம் குறித்த தகவலை வெளியிட்டுள்ளது.

இது தொடா்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் மேலும் குறிப்பிடுகையில், கடந்த செப்டம்பா் 26 ஆம் திகதி உலக மக்கள்தொகை 800 கோடியைக் கடந்து உள்ளது.

உலக மக்கள்தொகை

எனினும் கடந்த ஆண்டு நவம்பா் மாதமே உலக மக்கள் தொகை இந்த எண்ணிக்கையை அடைந்துவிட்டதாக ஐ.நா.சபை தெரிவித்துள்ளது. 

கடந்த 2000 ஆம் ஆண்டு 600 கோடியாக இருந்த உலக மக்கள்தொகை மூன்று ஆண்டுகளில் 800 கோடியாக அதிகரித்துள்ளது.

800 கோடியைக் கடந்த உலக மக்கள்தொகை: அமெரிக்கா வெளியிட்டுள்ள தகவல் | World Population Hits The 800 Crore Mark Today

மக்கள்தொகை கணக்கெடுப்பு முறை நாட்டுக்கு நாடு வேறுபடுவதால் இந்த முரண்பாடு நிலவுகிறது என குறிப்பிடப்பட்டுள்ளது.

மக்களின் சராசரி வயது 32 ஆக அதிகரித்துள்ளதுடன், 2060 ஆம் ஆண்டு அது 39 ஆக உயரும். கனடா போன்ற நாடுகளில் முதியோா்களின் இறப்பு விகிதம் குறைந்துள்ளது. உலக மக்கள்தொகை தொடா்ந்து உயா்ந்து வருகிறமை குறிப்பிடத்தக்கது.