உலகின் முதல் முழுமையான கண் மாற்று அறுவை சிகிச்சை அமெரிக்காவில் பதிவு

0
223

உலகின் முதல் முழுமையான கண் மாற்று அறுவை சிகிச்சை அமெரிக்காவில் பதிவாகியுள்ளது. நியூயார்க்கில் உள்ள அறுவை சிகிச்சை நிபுணர்கள் குழுவால் இந்த அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.

மனிதன் ஒருவருக்கு முதல் தடவையாக முழுமையான கண் மாற்று அறுவை சிகிச்சை செய்தமை இதுவே முதல் தடவை என அந்நாட்டு வைத்திய நிபுணர்கள் அறிவித்ததாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இதன் மூலம், நோயாளிக்கு பார்வை திரும்பவில்லை என்றாலும் குறித்த அறுவை சிகிச்சையை நடத்தியமை வெற்றி என குறித்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அறுவை சிகிச்சைக்கு 21 மணி நேரம் எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளது.

World's first complete eye transplant

Aaron James எனும் 46 வயதான முன்னாள் இராணுவ அதிகாரி ஒருவரே குறித்த சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார். அவர் உயர் மின்னழுத்தத்தின் கீழ் மின்சார விபத்தை எதிர்கொண்டுள்ள நிலையில் அவரது முகத்தின் இடது பக்கம் பலத்த சேதமடைந்துள்ளது.

அதன்படி, அவரது முகத்தின் இடது பக்க மூக்கு, கண், வாய் ஆகிய பகுதிகள் சேதமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. NYU Langone Health இன் அறுவை சிகிச்சைக் குழுவின் கூற்றுப்படி,

மாற்றப்பட்ட கண் நன்றாகச் செயல்படுகிறது மற்றும் பகுதி முகம் மாற்று அறுவை சிகிச்சையின் ஆறு மாதங்களுக்குள் நேர்மறையான அறிகுறிகளைக் காட்டும்.” என தெரிவித்துள்ளனர்.