இஸ்ரேல் – ஹமாஸ் போர்நிறுத்த அமெரிக்கா வலியுறுத்தல்! வெள்ளை மாளிகை தகவல்

0
144

அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவுடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு அவசர ஆலோசனை நடத்தியதாக தெரிவிக்கப்படுகின்றது.

இக்கலந்துரையாடலில் மனிதாபிமான அடிப்படையில் போர்நிறுத்தம் செய்ய அமெரிக்கா வலியுறுத்தியதாக கூறப்படுகிறது.

குறித்த தகவலை அமெரிக்காவின் வெள்ளை மாளிகை அறிவித்துள்ளது.

தற்காலிக போர் நிறுத்தம்

போர் நிறுத்தம் தொடர்பில் உலகின் பல பாகங்களிலிருந்தும் கோரிக்கைகள் விடுக்கப்பட்டு வரும் நிலையில் இஸ்ரோல் அதனை நிராகரித்து வருகின்றது.

இஸ்ரேல் - ஹமாஸ் போர்நிறுத்தம்....! ஜோபைடனின் அவசர தொலைபேசி அழைப்பு: வெள்ளை மாளிகை வெளியிட்ட தகவல் | Israel Hamas War Updates Peace Talk Usa

அத்துடன் ஹமாஸ் இயக்கத்தை அழிக்கும் வரை போர் நிறுத்தப்பட மாட்டாது என இஸ்ரேல் பிரதமர் பென்சமின் நெத்தன்யாகு அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில், அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவுடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு அவசர ஆலோசனை நடத்தியதாக அமெரிக்க வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.

காசாவில் பொதுமக்கள் பாதுகாப்பாக வெளியேறும் வரை காசாவில் தற்காலிக போர் நிறுத்தத்தை இஸ்ரேல் பின்பற்ற வேண்டும் என ஜோபைடன் இஸ்ரேல் பிரதமரிடம் வலியுறுத்தினார்.

பிணைக் கைதிகள் மீட்பு

மேலும் இரு தலைவர்களும் ஹமாஸ் அமைப்பினர் பிடியில் இருக்கும் பிணைக் கைதிகளை மீட்பது குறித்தும் ஆராய்ந்துள்ளனர்.

பிணைக் கைதிகளாக இருக்கும் அமெரிக்கா உள்ளிட்ட பல்வேறு நாட்டவர்களை விடுவிப்பதற்கான முயற்சிகளை தீவிரப்படுத்துமாறும், காசாவிற்கு செல்லும் மனிதாபிமான உதவிகள் அதிகரிக்கப்பட்டதை வரவேற்பதாகவும் ஜோபைடன் தெரிவித்துள்ளனர்.

இஸ்ரேல் - ஹமாஸ் போர்நிறுத்தம்....! ஜோபைடனின் அவசர தொலைபேசி அழைப்பு: வெள்ளை மாளிகை வெளியிட்ட தகவல் | Israel Hamas War Updates Peace Talk Usa

இஸ்ரேல் – ஹமாஸ் அமைப்பு இடையே ஒரு மாதத்திற்கு மேலாக நடைபெற்று வரும் போரில் ஆயிரக்கணக்கான மக்கள் உயிரிழந்துள்ளதுடன் காயமுற்றவர்கள் மருத்துவ வசதிகளின்றி அவல நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

அத்துடன் உணவு மருந்து நீர் மற்றும் மின்சாரம் ஆகியன காசாவில் தடைப்பட்டுள்ள நிலையில் போரில் அப்பாவி குழந்தைகள், பொதுமக்கள் பலியாகி வருவதாக ஜக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது.

போரை நிறுத்தக்கோரி அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்ஸ், இத்தாலி உள்ளிட்ட பல நாடுகளில் பொதுமக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவுடன் கலந்துரையாடி உள்ளமை குறிப்பிடத்தக்கது.