வைட்டமின் குறைபாடு இருப்பவர்களுக்கு பீட் ரூட் சாறு பல்வேறு வகையில் நன்மைகளை தருகிறது. பீட்ரூட் இல் அதிகளவு நன்மைகள் உள்ளன. அதில் இரும்புச் சத்து, பாலிக் ஆசிட் போன்ற சத்துக்களை அதிகரிப்பதற்கும் பீட்ரூட் ஜூஸை தொடர்ந்து குடித்து வரலாம்.
உடம்பில் ஹீமோகுளோபின் அளவைக் கூட்டுவதற்கும், உடம்புக்கு ரத்தச் சிவப்பு அணுக்களின் உற்பத்தியை அதிகரிப்பதற்கும், செல்களுக்கான ஆக்சிஜன் சப்ளை குறைவாக இருக்கும் பட்சத்தில், அதை அதிகரிப்பதற்கும் பீட்ரூட் சாறு நல்ல பயன் தருகிறது.
எனினும் , பீட் ரூட் சாற்றை அதிகமாக உட்கொள்வதில் பல்வேறு தீமைகளும் உள்ளன. இந்த தகவல் நிறைய பேருக்கு ஆச்சரியமும் அதிர்ச்சியும் கொடுத்திருக்கலாம். ஆனால் எந்த உணவும் அளவுக்கு மீறினால் ஆபத்துதான்.
யாரெல்லாம் சப்பிடக்கூடாது?
சிறுநீரக கற்கள் ஆபத்து
இதுதொடர்பாக மேற்கொள்ளப்பட்ட ஆய்வில், பீட்ரூட்டில் ஆக்சலேட் நிறைந்துள்ள காரணத்தால், அதை அதிகம் உட்கொள்வது சிறுநீரகத்தில் கற்கள் உருவாவதற்கு வழிவகுக்கும். இது சிறுநீர் ஆக்சலேட் வெளியேற்றத்தை அதிகரிக்கச் செய்வதால், கால்சியம் ஆக்சலேட் கற்களின் வளர்ச்சிக்கு வழிவகுக்கும்.
எனவே பீட்ரூட் சாற்றை அளவாக குடிக்க பரிந்துரைக்கப்படுகிறது. சிறுநீரக கற்கள் பிரச்னை உள்ளவர்கள் பீட்ரூட் சாற்றை முற்றிலும் தவிர்ப்பது நல்லது.
கடும் ஒவ்வாமை
அனாபிலாக்ஸிஸ் என்பது கடும் ஒவ்வாமை அல்லது அதில புரதத்துக்கான எதிர்ப்பு என்று இரண்டு பொருளில் குறிப்பிடலாம். பீட்ரூட் சாற்றை தொடர்ந்து குடித்து வந்தால், உடல் தானாகவே அதற்கு ஒவ்வாமையை ஏற்படுத்திக் கொள்ளும்.
இதனால் உடல்நலம் மிகவும் உணர்திறன் கொண்டு செயல்படத் துவங்கும். பீட்ரூட்டை அதிகம் சாப்பிடும் ஒருசிலருக்கு தொண்டை இறுக்கம் மற்றும் மூச்சுக்குழாய் அழற்சி போன்ற பிரச்னைகள் கூட ஏற்படுவதாக மருத்துவர்கள் கூறுகின்றனர்.
மலச்சிக்கல்
பீட்ரூட் சாற்றை அதிகமாக உட்கொள்வதால் சிறுநீர் அல்லது மலம் சிவந்து போகும் நிலை தான் பீட்ரூரியா. பீட்ரூட் அல்லது சிவப்பு நிற உணவுகளை அதிகமாக உட்கொள்வோருக்கு இந்நோய் பாதிப்புக்கான அறிகுறிகள் தோன்றும்.
மனிதனின் வெளியேற்றம் இயற்கையான நிறத்தில் இருந்தால் மட்டுமே உடலில் ஏற்படும் பிரச்னைகளை கண்டறிய முடியும். உணவின் காரணமாக நிறமாற்றத்துடன் வெளியேற்றம் அமைவது பல்வேறு வகையில் ஆபத்து.
கர்ப்பணி பெண்கள்
பீட்ரூட்டில் நைட்ரேட்டுகள் உள்ளன, இதை அதிகமாக உட்கொள்ளும்போது வயிற்றுப் பிடிப்பு ஏற்படலாம். அதனால் கர்ப்பமாக இருக்கும் பெண்கள் பீட்ரூட் சாற்றை தவிர்க்கச் சொல்லி மருத்துவர்கள் வலியுறுத்துகின்றனர்.
மேலும் அவர்கள் அதிகப்படியாக நைட்ரேட் உள்ள பீட்ரூட் சாப்பிட்டால் ஆற்றல் செயலிழப்பு, தலைவலி, தலைச்சுற்றல், கண் பார்வையில் மந்தம், கால்வலி, தசைப் பிடிமானம் போன்ற பிரச்னைகள் ஏற்படக்கூடும் என மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.
கல்லீரலுக்கு ஆபத்து
பீட்ரூட்டை அதிகமாக உட்கொள்வது கல்லீரலில் உலோக அயனிகளின் திரட்சியை ஏற்படுத்தும், இது நீண்ட காலத்திற்கு கல்லீரலை சேதப்படுத்தும் என்று ஆய்வாளர்கள் தரப்பில் கருத்து முன்வைக்கப்படுகிறது.
அதேபோன்று அதிகப்படியான பீட்ரூட் சாறு மற்றும் உணவுகளை உட்கொள்வதால் உடலில் கால்ஷியம் செயலிழப்பு ஏற்படும். கால்சியம் அளவு குறைவாக உள்ள பெண்கள், பீட்ரூட் சாற்றை அதிகமாக உட்கொள்வதைத் தவிர்க்க வேண்டும் என்று பரிந்துரைக்கப்படுகிறது