ஹமாஸிடம் உயிருடன் இருப்பதாக கூறப்பட்ட ஜேர்மன் யுவதி சடலமாக மீட்பு

0
155

ஹமாஸ் போராளிகளால் பிணை கைதியாக பிடித்துச் செல்லப்பட்ட ஜெர்மன் நாட்டு பெண் சடலமாக மீட்கப்பட்டார். கடந்த 7 ஆம் திகதி இஸ்ரேலுக்குள் ஊடுருவிய ஹமாஸ் போராளிகள் திறந்தவெளி இசை கச்சேரியில் கலந்து கொண்ட ஜெர்மன் நாட்டு பெண் டாட்டூ கலைஞர் ஷனி லெளக்கை பிணை கைதியாக பிடித்தனர்.

ஹமாஸ் போராளிகள் சென்ற பிக்-அப் டிரக்-கில் ஷனி லெளக் ஆடைகளின்றி கிடப்பது போன்ற காணொளி இணையத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

ஹமாஸிடம் உயிருடன் இருப்பதாக கூறப்பட்ட ஜேர்மன் யுவதி சடலமாக மீட்பு | Dead Body Of German Girl Who Was Alive By Hamas

தொடர்ந்து ஷனி லெளக்-கின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு காஸாவில் உள்ள ஒரு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகத் தெரிவித்த அவரது தாயார், மகளை மீட்டுத்தருமாறும் வீடியோ வெளியிட்டிருந்தார்.

இந்த நிலையில் ஷனி லெளக்கை ஹமாஸ் போராளிகள் சித்திரவதை செய்து கொலை செய்ததாக கூறப்படும் நிலையில் அவரது சடலம் மீட்கப்பட்டுள்ளதாக இஸ்ரேல் அரசு தெரிவித்துள்ளது.