சந்திரகிரகணத்தை இலங்கை மக்கள் பார்வையிட முடியும்

0
180

இலங்கை வாழ் மக்கள் 4 மணி நேர பகுதி சந்திர கிரகணத்தை பார்வையிட முடியும். இச்சந்திர கிரணகம் (28.10.2023) இரவு தொடக்கம் (29.10.2023) ஆம் திகதி காலை வரை சுமார் 4 மணித்தியாலங்கள் 25 நிமிடங்கள் தென்படவுள்ளதாக மொரட்டுவை – ஆர்தர் சி கிளார்க் மையம் இதுபற்றி தெரிவித்துள்ளது.

இதன்பிரகாரம் மேற்கு பசுபிக் பெருங்கடல், அவுஸ்திரேலியா, ஆசியா, ஐரோப்பா, ஆப்பிரிக்கா, கிழக்கு தென் அமெரிக்கா, வடகிழக்கு வட அமெரிக்கா, அட்லாண்டிக் பெருங்கடல், இந்தியப் பெருங்கடல், தென் பசிபிக் பெருங்கடல் பகுதிகளில் சந்திர கிரகணம் தெரியும்.

மேலும் நிலவின் பிரகாசம் மற்றும் நிறத்தில் எந்த மாற்றமும் ஏற்படவில்லை என்றும் மையம் தெரிவித்துள்ளது. சூரியன் சந்திரனுக்கிடையில் பூமி வரும்போதும் மூன்றும் ஒரே திசையில் வரும்போது பௌர்ணமி நாளில் சந்திர கிரகணம் ஏற்படுகிறது.

சந்திரகிரகணத்தை இலங்கை மக்கள் பார்வையிட முடியும் | People Of Sri Lanka Can See The Lunar Eclipse

முழு நிலாவும் பூமியின் நிழலின் கீழ் வரும்போது முழு சந்திர கிரகணமும் நிலவின் ஒரு பகுதி பூமியின் நிழலில் வரும்போது மட்டுமே பகுதி சந்திர கிரகணமும் நிகழும் என்று ஆர்தர் சி. கிளார்க் மையம் கூறுகிறது. பகுதி சந்திரகிரகணம் இலங்கை நேரப்படி ஒக்டோபர் 28 ஆம் திகதி 23.31 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.

பகுதி சந்திர கிரகணம் அக்டோபர் 29 அதிகாலை 01.05 மணிக்கும் அதிகபட்ச சந்திர கிரகணம் 29 அதிகாலை 01.44 மணிக்கு 05 வினாடிகளிலும் தெரியும்.

பகுதி சந்திர கிரகணத்தின் முடிவு 29 அதிகாலை 2.22 மணிக்கு நிகழும் என்றும் பெனும்பிரல் சந்திர கிரகணம் அதிகாலை 03.56 25 வினாடிகளுக்கு நிகழும் என்றும் ஆர்தர் சி கிளார்க் மையம் தெரிவித்துள்ளது.