நேரடியாக நாமினேட் செய்யப்பட்ட கூல் சுரோஷ்; பிக் பாஸில் இருந்து வெளியேறுகின்றாரா?

0
167

பிக் பாஸ் நிகழ்ச்சியில் இன்று நேரடியாக கூல் சுரோஷ் நாமினேட் செய்யப்பட்டுள்ள பரபரப்பு ப்ரோமோ வெளியாகியுள்ளது. இன்றைய தினம் 17ம் நாளில் பிக் பாஸ் நிகழ்ச்சி அடியெடுத்து வைத்துள்ளது.

பிக்பாஸ் 7 நிகழ்ச்சி முதல் நாளிலிருந்தே வித்தியாசமான டாஸ்க்குகள், விவாதங்கள், பிரச்சினைகள், சண்டைகள் என ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது .

இந்த 7வது சீசனில் அதிகமான பிரபலமான போட்டியாளர்கள் இல்லாத நிலையிலும் நிகழ்ச்சி முதல் நாளிலிருந்தே அடிப்பொலியாக அமைந்திருக்கின்றது.

இந்நிலையில் இன்றைய நிகழ்ச்சியின் முதல் ப்ரோமோ வெளியாகியுள்ளது. இன்று ”சாபக்கேடு” என்ற டாஸ்க் கொடுக்கப்படுகின்றது. அதில் எல்லோரும் நேரடியாக கூல் சுரோஷை நாமினேட் செய்கின்றனர்.

இதனால் அடுத்தவாரம் பிக் பாஸில் இருந்து அவர் வெளியேறுவாரா? அல்லது வாக்குகளை பெற்று காப்பாற்றப்படுவாரா என்ற விவாதம் இணையத்தில் எழுந்திருக்கின்றது.