அடாத்தாக வைக்கப்பட்ட புத்தர்சிலை! அசாத்சாலியின் குற்றச்சாட்டு

0
134

கொழும்பில் தனியார் ஒருவரின் காணியில் ஞானசார தேரரின் உதவியாளரினால் பகிரங்கமாக புத்தர்சிலை ஒன்று வைக்கப்பட்டதாகவும், அது தொடர்பான வழக்கு இன்றுவரை நீதிமன்றில் தொடர்வதாகவும் மேல் மாகாண முன்னாள் ஆளுநர் அசாத் சாலி குற்றம் சுமத்தியுள்ளார்.

இலங்கையின் தற்போதைய அரசியல் நிலவரங்கள் தொடர்பில் லங்காசிறியின் நேருக்கு நேர் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அவரிடம் எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே இந்த விடயத்தை சுட்டிக்காட்டியிருந்தார்.

மேலும், இவ்வாறான விடயங்களை புத்தசாசன அமைச்சு அதன் கவனத்தில் கொண்டு தடுத்து நிறுத்த வேண்டும் எனவும், ஆனால் இவர்கள் அவ்வாறான செயல்கள் எதனையும் இதுவரை செய்யவில்லை எனவும் குற்றச்சாட்டுக்களை முன்வைத்துள்ளார்.

”பௌத்த பிக்குகளால் அபகரிக்கப்படும் காணிகள் மற்றும் நிலங்கள் தொடர்பில் பல்வேறு சர்ச்சைகள் நாடளாவிய ரீதியில் காணப்படுகிறன.

இதற்கு புத்தசாசன அமைச்சு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். மேலும் காணி தொடர்பிலான பத்திரங்களை சரிபார்த்து உடனடி தீர்வை வழங்க வேண்டும்.

ஆனால் ஒருபோதும் இவ்வாறு நடப்பதில்லை. உரிய தீர்வு கிடைப்பதில்லை. இவ்வாறு இருக்கும் பட்சத்தில் அப்படி ஒரு அமைச்சு நாட்டில் எதற்கு?

உரிய தீர்வு கிடைக்காவிடில் அப்படி ஒரு அமைச்சு ஒருபோதும் தேவையில்லாத ஒன்றாகவே பார்க்கப்படும்” என தெரிவித்துள்ளார்.