காசாவை முழுமையாக இஸ்ரேல் ஆக்கிரமிப்பது தவறு! ஜோ பைடன் எச்சரிக்கை

0
146

இஸ்ரேல் மீண்டும் காசாவை முழுமையாக ஆக்கிரமிப்பது மிகப் பெரிய தவறாக முடியும் என அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் எச்சரித்துள்ளார்.

வெளிநாட்டு ஊடகம் ஒன்றிற்கு அளித்த நேர்காணலில் பைடன் இவ்வாறு கருத்து வெளியிட்டுள்ளார்.

இஸ்ரேலுக்கு ஆதரவாக குரல் கொடுத்து வந்த பைடன் தற்போது பாலஸ்தீனத்திற்காகவும் குரல் கொடுத்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்கா உதவி

நேர்காணலில் மேலும் கருத்துத் தெரிவித்த அவர் , ஹமாஸ் இயக்கத்தை அழிப்பது அவசியம். ஆனால் ஹமாஸ் பிடியில் உள்ள காசாவை முழுவீச்சில் இஸ்ரேல் ஆக்கிரமிக்க நினைப்பது தவறு.

அத்துடன் ஹமாஸ் இயக்கமானது பாலஸ்தீன மக்களின் பிரதிநிதிகள் அல்ல. ஹமாஸ் குழுவை பாலஸ்தீனர்கள் குரலாக நினைத்துக் கொள்ளக் கூடாது எனவும் பைடன் தெரிவித்துள்ளார்.

மேலும் போரில் குழந்தைகளும் பெண்களும் பாதிக்கப்படாமல் இருக்க வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

போரில் இஸ்ரேலுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் அமெரிக்கா வழங்கும் என உறுதியளித்த பைடன் இஸ்ரேல் போர் விதிகளுக்கு உட்பட்டு நடக்கும் என நம்புவதாக குறிப்பிட்டுள்ளார்.