யாழ்.மத்திய பேருந்து நிலையத்தில் பிறந்தநாள் கொண்டாட்டம்; இருவர் கைது

0
190

யாழ் மத்திய பேருந்து நிலையத்தில் பொதுமக்களுக்கு இடையூறு விளைவித்து, பிறந்தநாள் கொண்டாடிய கும்பலை சேர்ந்த இரண்டு கைது செய்யப்பட்டு தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

யாழ்ப்பாண மத்திய பஸ் நிலையத்திற்கு 50க்கும் மேற்பட்ட மோட்டார் சைக்கிளில் வந்த 150க்கும் அதிகமான இளைஞர்கள் சமீபத்தில் ஒன்று கூடி தங்களில் ஒருவரின் பிறந்தநாளை கேக் வெட்டி கொண்டாடியுள்ளனர்.

இதேவேளை, அதனை டிக்டொக் போன்ற சமூக வலைத்தளங்களில் பகிர்ந்தும் உள்ளனர்.

பிறந்தநாள் கொண்டாடிய இளைஞர்களின் செயற்பாடானது வீதியில் மற்றும் பேருந்து நிலையத்தில் இருந்தவர்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தும் விதமாக இருந்ததாக யாழ் பொலிஸாருக்கு தொலைபேசி ஊடாக அறிவிக்கப்பட்ட போதிலும் பொலிஸார் அது தொடர்பில் நடவடிக்கை எடுக்கவில்லை.

யாழ்ப்பாண நகர் மத்தியில் மக்கள் நெருக்கடியான நேரத்தில் சட்டவிரோதமான முறையில் ஒன்று கூடி பிறந்தநாள் கொண்டாடியுள்ளார்கள் அது தொடர்பில் பொலிஸார் நடவடிக்கை எடுக்காதமை தொடர்பில் பலரும் விசனம் தெரிவித்து இருந்தனர்.

யாழில் பொதுவெளியில் பிறந்தநாள் கொண்டாடிய கும்பலில் இருவருக்கு நேர்ந்த கதி! | Gang Celebrating Birthday In Jaffna Arrested

இதனையடுத்து சட்டவிரோதமான முறையில் கூட்டம் கூடி பிறந்தநாள் கொண்டாடி, மக்களின் இயல்வு வாழ்வுக்கு இடையூறு ஏற்படுத்தியதுடன் மக்களை அச்சுறுத்தும் வகையில் நடந்து கொண்டமை உள்ளிட்ட குற்றச்சாட்டுக்களின் கீழ் கொண்டாட்டத்தில் ஈடுபட்டவர்க்ளை கைது செய்யும் நடவடிக்கை எடுக்கப்பட்டது.

யாழில் பொதுவெளியில் பிறந்தநாள் கொண்டாடிய கும்பலில் இருவருக்கு நேர்ந்த கதி! | Gang Celebrating Birthday In Jaffna Arrested

விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார் இரண்டு பேரை கைது செய்து நேற்றைய தினம் சனிக்கிழமை நீதவான் முன்னிலையில் முற்படுத்தி இருந்தனர்.

யாழில் பொதுவெளியில் பிறந்தநாள் கொண்டாடிய கும்பலில் இருவருக்கு நேர்ந்த கதி! | Gang Celebrating Birthday In Jaffna Arrested

அவர்களை 14 நாட்களுக்கு விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்ட நீதவான், சம்பவத்துடன் தொடர்புடைய பிறந்தநாள்காரர் உள்ளிட்ட அனைவரையும் கைது செய்து முற்படுத்த வேண்டும் என பொலிஸாருக்கு பணித்துள்ளார்.

இதனையடுத்து பொலிஸார் அனைவரையும் கைது செய்வதற்க்கு தீவிர நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளனர்.