காசாவின் நிலமை இலங்கையின் இறுதிப்போரை நினைவூட்டுகின்றது!

0
181

காசாவில் தற்போது இடம்பெறும் சம்பவங்கள் இலங்கையின் இறுதிபோரின் ஆரம்ப தருணங்களை நினைவுபடுத்துகின்றதாக பத்திரிகையாளரும் ஆய்வாளரும் எழுத்தாளருமான மார்க் சோல்டர் தெரிவித்துள்ளார்.

இதனை இலங்கையின் சமாதான முயற்சிகளில் நோர்வேயின் பங்களிப்பு குறித்த என்ற நூலை எழுதிய மார்க்சோல்டர் தனது டுவிட்டர் பதிவில் தெரிவித்துள்ளார். அவரது பதிவில்,

ஆட்டிலறி தரை தாக்குதல்

காசாவில் தற்போது இடம்பெறும் சம்பவங்கள் இலங்கையின் இறுதிபோரின் ஆரம்ப தருணங்களை நினைவுபடுத்துகின்றன. அக்காலப்பகுதியில் இலங்கையில் பொதுமக்கள் அரசாங்கம் அறிவித்த உயர்பாதுகாப்பு வலயத்திற்குள் செல்லுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டனர்.

காசாவின் நிலமை இலங்கையின் இறுதிப்போரை நினைவூட்டுகின்றது! | Situation Gaza Reminiscent Of Sri Lanka Final War

இதன் பிரதான விளைவு என்னவென்றால் தொடர்ச்சியான வான்வெளி ஆட்டிலறி தரைதாக்குதலால் பொதுமக்கள் உயிரிழப்புகள் பல மடங்காக அதிகரித்தன.

விடுதலைப்புலிகளை பொதுமக்கள் மத்தியில் காணப்பட்ட ஆயுதங்களை இலக்குவைத்து இலங்கை இராணுவத்தினர் இந்த தாக்குதல்களை மேற்கொண்டிருந்தனர்.

எனினும் எதிர்வரும் நாட்களில் காசாவில் இதுபோன்ற சூழ்நிலை ஏற்படாது என நம்புகின்றேன் பிரார்த்திக்கின்றேன் எனவும் த்திரிகையாளரும் ஆய்வாளரும் எழுத்தாளருமான மார்க் சோல்டர் தெரிவித்துள்ளார்.

அதேவேளை கடந்த சனிக்கிழமை (7) இஸ்ரேல் மீது ஹமாஸ் திடீரென தாக்குதலை ஆரம்பித்த நிலையில் இரு தரப்புக்கும் இடையில் போர் மூண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.