யாழிற்கு வந்த கல்வி அமைச்சர்; கோலாகல நிகழ்வு!

0
179

யாழ்ப்பாணம் கோப்பாய் ஆசிரிய கலாசாலையின் நூறாவது ஆண்டின் இறுதி நிகழ்வுகள் கல்வி அமைச்சர் கலாநிதி சுசில் பிரேமஜயந்தவின் பங்குபற்றலுடன் இன்று இடம் பெற்றன.

தபால் முத்திரை வெளியீடு

நிகழ்வில் விருந்தினர்கள் ஆலய வழிபாட்டுடன் வரவேற்கப்பட்டு நிகழ்வுகள் இடம்பெற்றன.

இதன் போது கலாசாலையின் முன்னாள் அதிபர்கள் கௌரவிக்கப்பட்டு நூறாவது ஆண்டு நினைவையொட்டிய 25 ரூபாய் பெறுமதி கொண்ட தபால் முத்திரை ஒன்றும் வெளியீடு செய்துவைக்கப்பட்டது.

யாழிற்கு வந்த கல்வி அமைச்சர்; கோலாகலமாக இடம்பெற்ற நிகழ்வு! | 100Th Year Events Of Koppai Teachers College

அத்துடன் கோப்பாய் ஆசிரியர் கலாசாலையின் அதிபர் ச.லலீசனால் நூறாவது ஆண்டு நூல் ஒன்றும் வெளியீடு செய்துவைக்கப்பட்டது.

யாழிற்கு வந்த கல்வி அமைச்சர்; கோலாகலமாக இடம்பெற்ற நிகழ்வு! | 100Th Year Events Of Koppai Teachers College

மேலும் நிகழ்வில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஆசிரியர் கலாசாலை ஆசிரிய மாணவர்கள் பாடசாலை அதிபர்கள் பழைய மாணவர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.