பிக் பாஸ் சீசன் 7 விறுவிறுப்பாக செல்கிறது. இந்த சீசனில் கூல் சுரேஷ், பூர்ணிமா ரவி, ரவீனா தாஹா, பிரதீப் ஆண்டனி, நிக்சன், மணி சந்திரா, அக்ஷயா, ஜோவிகா விஜயகுமார், விஷ்ணு, விசித்ரா, சரவணன் விக்ரம், அனன்யா ராவ், பாவா செல்லத்துரை மற்றும் விஜய் வர்மா போட்டியாளர்களாக களமிறங்கியுள்ளனர்.
இதுவரையில்லத வகையில் இந்த சீசனில் முதல் வாரமே டபுள் நாமினேஷன் நடந்து முடிந்திருக்கிறது. அப்படி நடிகை விசித்திரா, ஐஷுவை நாமினேட் செய்வதற்கு சொன்ன காரணம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
விசித்ரா கூறுகையில், ஐஷு சின்ன உடைகளை அணிகிறார், அவர் உட்காரும் விதம் சரியில்லை இங்கே வயது சிறியவர்கள் முதல் வயதில் பெரியவர்கள் வரை இருக்கிறார்கள்.
அதனால் ஆடை விஷயத்தில் கவனம் கொள்ள வேண்டும், அதனால் அவரை நாமினேட் செய்கிறேன்” என்றார். இதையடுத்து நெட்டிசன்களின் கோபத்திற்கும் பிரபலங்களின் கண்டனத்திற்கும் விசித்ரா ஆளாகியுள்ளார்.