இந்தியக் கொடி எரிப்பு மற்றும் மோடியின் கட்அவுட்டில் காலணிகள் வீச்சு; காலிஸ்தான் ஆதரவாளர்கள் போராட்டம்!

0
259

காலிஸ்தான் திவிரவாதி கனடாவில் சுட்டுக் கொல்லப்பட்டதை அடுத்து கனடா இந்தியா உறவில் விரிசல்களை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் டொராண்டோவில் காலிஸ்தான் ஆதரவாளர்கள் சிலர் இந்தியக் கொடியை எரித்ததுடன் பிரதமர் நரேந்திர மோடியின் அட்டை கட்அவுட்டில் காலணிகளை வீசு அதனை மிதித்துள்ளனர்.

Indian flag burnt canada

கனேடிய நகரங்களில் காலிஸ்தான் பிரிவினைவாத முழக்கம்

ராய்ட்டர்ஸ் அறிக்கையின்படி, இந்த மூன்று முக்கிய கனேடிய நகரங்களில் எதிர்ப்பாளர்கள் ‘காலிஸ்தான்’ என்ற வார்த்தையுடன் மஞ்சள் கொடிகளை அசைத்து பிரிவினைவாத முழக்கங்களை எழுப்பி இந்திய தேசிய கொடியை எரித்துள்ளனர்.

அதேசமயம் ஒட்டாவாவில் உள்ள இந்தியாவின் உயர் ஸ்தானிகராலயத்திற்கு வெளியே மூடப்பட்ட சாலைகள் மற்றும் டொராண்டோ மற்றும் வான்கூவரில் உள்ள தூதரக கட்டிடங்கள் திங்களன்று 500க்கும் குறைவான கனேடிய காலிஸ்தான் பிரிவினைவாத எதிர்ப்பாளர்களின் ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்றிருந்தன.

அத்துடன் ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொல்லப்பட்டது தொடர்பாக இந்திய அரசுக்கு தங்கள் கண்டனத்தை அவர்கள் வெளிப்படையாக தெரிவித்திருந்தனர். 

Indian flag burnt canada