மரு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை வயசு வித்தியாசம் இல்லாமல் அனைவருக்கும் வரக்கூடிய ஒன்று.
உடல் பருமன் இருக்கும் ஆண், பெண் இருபாலருக்கும் , நீர்க்கட்டி தைராய்டு போன்ற பிரச்சனை இருப்பவர்களுக்கும் மற்றும் சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கும் மருக்கள் வரும்.
பெரும்பாலும் முகம் மற்றும் கழுத்து பகுதியில் மருக்கள் இருக்கும். வீட்டில் செய்யக்கூடிய எளிய மருத்துவ வைத்தியம் மூலம் மருவை எளிய முறையில் நீக்கலாம்.
தேவையான பொருட்கள்
- எலுமிச்சை பழம்
- இஞ்சி
- சுண்ணாம்பு
செய்முறை
ஒரு துண்டு இஞ்சியை எடுத்து நன்றாக துருவி அதன் சாறை எடுத்துக் கொள்ளவும்.
பின்னர் அதில் சுண்ணாம்பு சிறிதளவு சேர்க்க வேண்டும்.
சுண்ணாம்பு சேர்த்தவுடன் அதில் எலுமிச்சை சாறு ஊற்றி நன்றாக கலக்க வேண்டும்.
அதன்பிறகு அதை எடுத்து மரு இருக்கும் இடத்தில் தடவ வேண்டும்.
தினமும் இரவு மற்றும் காலையில் இதை செய்து வந்தால் நம் முகத்தில் உள்ள மருக்கள் ஒரு வாரத்தில் நீங்கிவிடும்.