இந்தியாவில் உள்ள தமது குடிமக்களை எச்சரிக்கையுடன் இருக்குமாறு கனடா வேண்டுகோள்..

0
262
Canadian flag moved by the wind

கனடாவில் காலிஸ்தான் பிரிவினைவாதி மற்றும் இந்தியாவால் தேடப்படும் குற்றவாளி ஹர்தீப் சிங் நிஜ்ஜர் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், தற்போது இந்தியாவில் உள்ள தங்களது குடிமக்களை விழிப்புடன் இருக்க வேண்டும் என கனடா கேட்டுக்கொண்டுள்ளது.

எதிர்மறையான கருத்துகள்

ஹர்தீப் சிங் நிஜ்ஜர் கொலை வழக்கில் இந்தியா ஒத்துழைக்க வேண்டும் என அமெரிக்கா குறிப்பிட்டுள்ள நிலையில், இந்தியா தரப்பில் அந்த விவகாரத்தில் தங்களுக்கு தொடர்பில்லை என்றே கூறி வருகிறது.

எச்சரிக்கையுடன் இருங்கள்... இந்தியாவில் உள்ள தமது குடிமக்களுக்கு கனடா வேண்டுகோள் | Stay Vigilant Canada Asks Citizens In India

இந்த நிலையில் கனடாவுக்கு எதிராக ஆர்ப்பாட்டங்கள், எதிர்மறையான கருத்துகள் சமூக ஊடகங்களில் பரவி வருவதாகவும், இதனால் கனேடிய மக்கள் இந்தியாவில் விழிப்புடன் இருக்க கனேடிய நிர்வாகத்தால் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

நிஜ்ஜர் படுகொலை தொடர்பில் காலிஸ்தான் ஆதரவாளர்கள் கனடாவின் ரொறன்ரோ, ஒட்டாவா மற்றும் வான்கூவரில் அமைந்துள்ள இந்திய தூதரகங்கள், துணை தூதரகங்களுக்கு வெளியே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

நிஜ்ஜர் படுகொலையில் இந்திய அதிகாரிகளுக்கு தொடர்பிருக்கலாம் என கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ வெளிப்படையாக கூறிய நிலையிலேயே தற்போது கனடாவில் காலிஸ்தாம் ஆதரவாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

சொத்துக்கள் பறிமுதல் செய்யப்படும்

மேலும் கனடாவில் உள்ள இந்துக்களை காலிஸ்தான் ஆதரவாளர்கள் மிரட்டுவதாகவும், கோவில்களை சேதப்படுத்துவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. நிஜ்ஜர் படுகொலையில் தங்களின் பங்கு தொடர்பில் கனடா இதுவரை உறுதியான ஆதாரங்கள் எதையும் பகிர்ந்துகொள்ளவில்லை எனவும் இந்தியா குறிப்பிட்டுள்ளது.

எச்சரிக்கையுடன் இருங்கள்... இந்தியாவில் உள்ள தமது குடிமக்களுக்கு கனடா வேண்டுகோள் | Stay Vigilant Canada Asks Citizens In India

இந்த நிலையில், பிரித்தானியா, அமெரிக்கா, கனடா, துபாய், பாகிஸ்தான் மற்றும் சில நாடுகளில் தலைமறைவாகியுள்ள 19 காலிஸ்தான் பிரிவினைவாதிகளின் பட்டியலை இந்தியா தயார் செய்துள்ளதாகவும், அவர்களின் சொத்துக்கள் பறிமுதல் செய்யப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

நிஜ்ஜர் படுகொலை தொடர்பில் முக்கிய ஆதாரங்களை இந்தியாவுடன் பகிர்ந்து கொண்டதாகவும், பல வாரங்கள் முன்னரே அப்படியான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டதாகவும் கனடா தெரிவித்துள்ளது.