ஆதாரம் இல்லாமல் கனடா மற்றும் சனல் 4 வாயைத் திறந்திருக்காது!

0
213

கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, சீக்கியர் தலைவரான ஹர்தீப் சிங் நிஜ்ஜர் படுகொலையில் இந்திய அரசாங்கத்தின் பங்கு உறுதி செய்யப்பட்டுள்ளதாக வெளிப்படையாக குற்றம் சாட்டி இருந்தார்.

இவ்வாறான நிலையில் கனடா போன்ற ஒரு நாட்டின் அதிபர் இந்திய தொடர்பில் குற்றச்சாட்டு வைக்கிறார் என்றால் ஆதாரம் இல்லாமல் அவர் வாயைத் திறந்திருக்கமாட்டார் என முகநூலில் ராஜரெட்ணம் நேமிநாதன் என்பவர் கருத்து வெளியிட்டுள்ளார்.

மேலும் அவர் தெரிவித்திருப்பது,

ஆதாரம் இல்லாமல் கனடா மற்றும் சனல் 4 வாயைத் திறந்திருக்காது! | Canada Channel 4 Easter Attack Jegmeet Singh

அந்த நாடுகளில் அரசியல்வாதிகள் எதிர்க்கட்சிகளோடு ஒரே மேடையில் விவாதிப்பார்கள். உழறுவாய்ப் பேச்சுப் பேசுபவர் கனடாவைப்போல ஒரு நாட்டில் கவுன்சில் அங்கத்தவராகக்கூட ஆகமுடியாது.

அதேபோன்று சனல் 4 போல ஒரு ஊடகம் வாயைத் திறந்துள்ளது என்றால் அவர்களிடம் சரியான ஆதாரம் உள்ளது என்றுதான் அர்த்தம்.

பிரித்தானியா போன்றதொரு நாட்டில் ஆதாரம் இல்லாமல் ஊடகங்கள் உழறுவதில்லை. ஊடக அறத்தை மீறித் தவறு செய்தது என்பதற்காக பழம்பெரும் பத்திரிகை ஒன்றை நீதிமன்றம் இழுத்துமூடியது. 

ஆதாரம் இல்லாமல் கனடா மற்றும் சனல் 4 வாயைத் திறந்திருக்காது! | Canada Channel 4 Easter Attack Jegmeet Singh

நான் அந்த நாட்டில் கடையில் பத்திரிகை விற்ற காலத்தில் இது நடந்தது. நாங்களும் அடுத்தநாள் பத்திரிகை வாங்க வந்த வாசகர்களுக்கு சொறி டொட் கொம் என்று சொன்னது ஞாபகத்திற்கு வருகிறது.

ஊடகம் அவை வெளியிடும் தகவல் போன்ற விடயங்களில் மிகவும் கவனம் செலுத்துவார்கள். போனால் போகட்டும் என்று அடித்துவிடும் வேலையை அவர்கள் ஒருபோதும் செய்யமாட்டார்கள்.

ஆதாரம் உள்ளதா? ஆதாரம் உள்ளதா? என்று கனடாவிடமோ சனல் 4 இடமோ கேட்டு வாயைக் கொடுத்து எதையோ புண்ணாக்காமல் இருப்பது புத்திசாலித்தனம் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.