தியாக தீபம் திலீபன் பேரணி மீது குண்டர்கள் தாக்குதல்..! சிங்கள செயற்பாட்டாளர் கண்டனம்

0
205

திருகோணமலையில் தியாக தீபம் திலீபனின் உருவ பேரணி தாக்கப்பட்டமைக்கு சிங்கள செயற்பாட்டாளர் ஒருவர் கண்டனம் தெரிவித்துள்ளார்.

காலி முகத்திடலில் நடைபெற்ற கோட்டா கோகம ஆர்ப்பாட்டத்தின் செயற்பாட்டாளர்களில் ஒருவரான லஹிரு வீரசேகர தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார்.

திலீபன் நினைவேந்தல் வாகனங்கள் அணிவகுத்து செல்லும் போது ஒரு குழுவினர் தடிகளால் தாக்கியுள்ளனர்.

குண்டர்கள் தாக்குதல்

பொலிஸார் எவ்வளவு அசமந்தமாக நடந்து கொண்டார்கள் என்பது தெளிவாக தெரிகிறது.

வாகனங்களை மட்டுமின்றி அங்கு வந்தவர்கள் மீதும் தலைக்கவசத்தால் அடிக்கிறார்கள். எனினும் யாரும் முறைப்பாடு செய்யவில்லை பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவிக்கிறார் என லஹிரு தெரிவித்துள்ளார்.

1983 இல் கறுப்பு ஜூலையின் போது, அரசாங்கம் மக்களை கொல்ல அனுமதித்து காத்திருந்தது. எனவே தமிழர் என்பதாலேயே தனி பிரச்சனை. ஆனால் புலிகள் என்று சொல்லாதீர்கள்.

காலி முகத்திடல் தாக்குதல்

அது எதுவுமே இல்லாமல் மே 09 அன்று காலி முகத்திடல் மீது தாக்குதல் நடத்தியது சிங்கள பௌத்த குண்டர்கள்தான்.

ஒவ்வொரு 9ம் திகதியும் காலி முகத்திடலுக்கு நாங்கள் சென்றது மக்கள் போராட்டத்தின் வீரர்களை நினைவுகூரவே. அதற்கு அனுமதி கிடைக்காததால் நாங்கள் எதிர்த்து போராடினோம்.

video source from Lankasri

எனவே அந்த மக்களுக்கு திலீபன் ஒரு மாவீரன். உலகம் என்ன சொன்னாலும் தடியால் அடிபட்டு ஒரு மனிதன் இறந்தால் அதுதான் உண்மையாகும்.

அந்த உண்மைக்காக நிற்க ஒத்துக் கொள்ளாதவர்கள் தங்களுக்கு தாங்களே குழி வெட்டிக் கொள்வார்கள் என லஹிரு வீரசேகர தெரிவித்துள்ளார்.  
Gallery