அரசு அதிகாரிகள் ஓய்வு பெற்ற பிறகும் கட்டாயமாக்கப்படும் நடைமுறை..

0
210

அரசு அதிகாரிகள் ஓய்வு பெற்ற பிறகும் சொத்து பொறுப்பு அறிக்கையை வழங்குவது கட்டாயமாக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கபப்டுகின்றது.

இம்மாதம் 15ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் புதிய ஊழல் எதிர்ப்புச் சட்டத்தின் கீழ் இந்தப் பிரகடனங்கள் வழங்கப்பட வேண்டும் எனத் தெரிவிக்கப்படுகிறது.

அதன்படி, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சொத்து மற்றும் பொறுப்பு அறிக்கையை வழங்க வேண்டிய எண்ணிக்கையும் அதிகரிக்கும் என்று கூறப்படுகிறது.

அதேசமயம் ஜனாதிபதி தனது சொத்துக்கள் மற்றும் பொறுப்பு அறிக்கைகளை வெளியிட வேண்டும்.