வெள்ளை அழகு, கருப்பு அசிங்கமா? கோபமான புதுமாப்பிள்ளை அசோக் செல்வன்

0
265

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் இளம் நாயகனாக இருப்பவர் அசோக் செல்வன். இவர் அண்மையில் நடிகை கீர்த்தி பாண்டியனை திருமணம் செய்து கொண்டார்.

இதில் கீர்த்தி பாண்டியன் நிறம் குறித்து சிலர் மோசமான கமெண்ட்ஸ் பதிவு செய்திருந்தனர். தொடர்ந்து அவருக்கு ஆதரவாக பலரும் பதிவிட்டிருந்தனர். இந்த நிலையில் யூடியூப் சேனல் ஒன்றுக்கு அசோக் செல்வன் பேட்டியளித்தார்.

அப்போது பெண் தொகுப்பாளர் அசோக்கிடம் அழகு அவருக்கு ப்ளஸ்ஸா அல்லது மைனஸா எனக் கேள்வி எழுப்பியுள்ளார். அதாவது நீங்கள் மிகவும் அழகாக இருக்கிறீர்கள்.

ஆனால் இப்போதெல்லாம் பக்கத்து வீட்டு பசங்க மாதிரி இருக்கும் தனுஷ், விஜய் சேதுபதி போன்ற நடிகர்களை தான் ரசிகர்களுக்கு அதிகம் பிடித்துள்ளது.

Ashok selvan

உங்களைப் போன்ற கலரா இருப்பது ப்ளஸ்ஸா அல்லது மைனஸ்ஸா எனக் கேட்டுள்ளார். அதற்கு அசோக் செல்வன் இந்த கேள்வியே தப்பானது நீங்கள் எதனை அழகு என சொல்றீங்க.

விஜய் சேதுபதியும் தனுஷும் அழகில்லையா? என அதிரடி காட்டினார். அதற்கு பதிலளித்த பெண் தொகுப்பாளர் “இப்போது உள்ள பெண்கள் அழகைப் பார்த்து தான் ஆண்களை சைட் அடிக்கிறார்கள்” எனக் கூறினார்.

அதற்கும் மறுப்புத் தெரிவித்த அசோக் செல்வன் “இது தவறான புரிதல் அடிப்படையில் இந்தக் கேள்வியே தவறானது. வெள்ளையாக இருந்தால் அழகு கருப்பென்றால் அசிங்கம் என பார்ப்பது ஆங்கிலேயர்களின் மனநிலை. cosmetic industries செய்த வேலை இதெல்லாம் என கூறினார்.