ABC ஜுஸ் உடலுக்கு உகந்ததா..!

0
317

தற்போது சமூக வலைத்தளங்களில் பரவலாக பேசப்பபடும் ஒரு மருத்துவ பானம் தான் ABC ஜுஸ்.

இந்த பானம் உடல் நலத்துக்கும், உடல் பொலிவு பெறுவதற்கும் பெரிதும் உதவுவதாகவும் இதனை தொடர்ந்து பருகுவதனால் பத்து வருடம் இளமையானது போன்ற தோற்றம் கிடைப்பதாகவும் பல மிகைப்படுத்தப்பட்ட கருத்துகள் சமூக வலைத்தளங்களில் உலாவுகின்றன.

இந்த ABC ஜுஸ் குறித்து கூறப்படும் கருத்துக்கள் எந்தளவுக்கு உண்மைதன்மை வாய்ந்தது என இந்த பதிவில் பார்ப்போம்.

ஆப்பிள், பீட்ரூட்,காரட் இந்த மூன்றின் கலவைதான் ABC ஜுஸ் என அழைக்கப்படுகிறது. இதில் அப்படி என்ன ஸ்பெஷல்?

பொதுவாகவே எல்லா பழங்களும் உடலுக்கு நன்மை தர கூடியவையே, ஆனால் அதில் உள்ள வைட்டமின்களுடன் நார்ச்சத்துக்களும் உடலுக்கு போய் சேரும் போது தான் குறித்த பழத்தின் முழுமையான பயன் உடலுக்கு கிடைக்கும்.

நாம் எந்த பழத்தையும் ஜுஸ் போட்டு குடிக்கும் போது இதன் சாற்றை மாத்திரமே எடுத்துக்கொள்கின்றோம், இதனால் அதிலுள்ள நார்ச்சத்தக்கள் இழக்கப்படுகின்றது.

அந்த வகையில் ABC ஜுஸ் எடுத்துக்கொள்ளும் போதும் அதில் உள்ள நார்ச்சத்தக்கள் முழுமையாக உடலுக்கு கிடைக்கும் வகையில் எடுத்துக்கொள்ள வேண்டும்.

இயற்கையாகவே சக்கரை காணப்படுகின்றது

பொதுவாகவே ஜுஸை வடிகட்டாமல் பருகுவது சிறந்த பலனை கொடுக்கும். ABC ஜுஸை பொருத்தவரையில் அனைவரும் கூறும் அளவுக்கு சத்துக்கள் சிறைந்த பானம் என ஏற்றுக்கொள்ள முடியாது.

ஆப்பிள், பீட்ரூட், காரட் ஆகியவற்றில் இயற்கையாகவே சர்க்கரை காணப்படுகின்றது. இதனை அப்படியே சாப்பிடும் போது அதில் அடங்கியுள்ள நார்சத்துக்கள் காரணமாக உடலில் சர்க்கரையின் அளவை அதிகரிக்காமல் பார்த்துக்கொள்ளும், அதே நேரம் உடலுக்கு தேவையான வைட்டமின்களும் ஓர் அளவுக்கு கிடைக்கின்றது.

ABC ஜுஸ் உடலுக்கு உகந்ததா? உண்மையை அறிய இந்த பதிவை பாருங்க | Abc Juice Benefits

இதை ஜுஸ் ஆக எடுத்துக்கொள்ளும் போது அதிலும் வடிகட்டியதாக இருந்தால் இதுவும் கடைகளில் கிடைக்கும் குளிர்பானங்கள் போன்று வைட்டமின்கள் அடங்கிய ஒரு சாராரண பானம், அவ்வளவு தான்.

இதனை ஒப்பிடும் போது சாதாரணமான விலையில் கிடைக்கக் கூடிய நெல்லிக்காய், கொய்யாப்பழம் போன்றவற்றில் அதிக சத்துக்கள் நிறைந்துள்ளது.

எடை குறைப்பில் ஆரம்பித்து, முகப் பொலிவு, இதய நோய், புற்றுநோய் எனப் பலவற்றுக்கும் மிகச் சிறந்த பலனை அளிக்கக்கூடிய ஜூஸ் வகைகளில் ABC ஜூஸ் தான் சிறந்த சாய்ஸ் என பலரும் இன்று இதன் பின்னால் ஓடிக்கொண்டிருக்கின்றார்கள்.

அதனை எவ்வாறு எடுத்துக்கொள்ள வேண்டும் என்பதை உணர்ந்து செய்யும் போதே உண்மையில் பலனை பெற முடியும்.

பழங்கள் காய்கறிகளை சமைத்தோ ஜூஸ் செய்தோ சாப்பிடுவதைவிட பச்சையான சாப்பிடுவதே நிறந்தது.

என்னங்க சொல்றீங்க சமையல் செய்யாமல் சாப்பாடா? அப்படி யோசிக்கிறது புரியுது. முடிந்தவரை பழங்களையாவது ஜூஸ் போடாமல் எடுத்துக்கொள்வது நல்லது.

ஜூஸ் செய்தாலும் குறைந்தபட்சம் வடிகட்டாமலாவது குடிக்க முயற்சி செய்யுங்கள். இதன் மூலம் சிறந்த பலனை பெற முடியும்.