6 வருடங்களை கடந்த துப்பறிவாளன் படத்தின் முழு வசூல்..

0
196

துப்பறிவாளன்

நடிகர் விஷாலுக்கு மாபெரும் வெற்றியை தேடி தந்த திரைப்படங்களில் ஒன்று துப்பறிவாளன்.

மிஸ்கின் இயக்கத்தில் உருவான இப்படத்தில் விஷாலுடன் இணைந்து பிரசன்னா, வினய், ஆண்ட்ரியா, அணு இமானுவேல் என பல நட்சத்திரங்கள் நடித்திருந்தனர்.

கடந்த 2017ஆம் ஆண்டு வெளிவந்த இப்படம் மக்கள் மத்தியில் சிறப்பான வரவேற்பை பெற்றது.

இந்நிலையில் துப்பறிவாளன் திரைப்படம் வெளிவந்து 6 ஆண்டுகளை நிறைவு செய்துள்ள நிலையில், இப்படத்தின் முழு வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

வெளிவந்து 6 வருடங்களை கடந்த துப்பறிவாளன் படத்தின் முழு வசூல்.. எவ்வளவு தெரியுமா.. | Thupparivaalan Box Office

முழு வசூல்

அதன்படி, இப்படம் உலகளவில் ரூ. 31 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது. துப்பறிவாளன் முதல் பாகத்தின் வெற்றியை தொடர்ந்து இரண்டாம் பாகம் துவங்கியது.

இதில் ஏற்பட்ட சில பிரச்சனை காரணமாக படத்திலிருந்து மிஸ்கின் வெளியேறியதை நாம் அறிவோம். தற்போது துப்பறிவாளன் 2 படத்தை விஷால் தானே இயக்கி நடிக்கவுள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு அடுத்த ஆண்டு துவங்கவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

வெளிவந்து 6 வருடங்களை கடந்த துப்பறிவாளன் படத்தின் முழு வசூல்.. எவ்வளவு தெரியுமா.. | Thupparivaalan Box Office