பிரித்தானியாவில் மூதாட்டிக்கு லொத்தரியில் விழுந்த மிகப்பெரும் பரிசு தொகை!

0
203

பிரித்தானியாவை சேர்ந்த 70 வயது மூதாட்டி ஒருவருக்கு லொத்தரியில் மிகப்பெரும் பரிசு கிடைத்துள்ளது.

பிரித்தானியாவில் உள்ள டோர்கிங் பகுதியை சேர்ந்தவர் டோரிஸ் ஸ்டான்பிரிட்ஜ் என்ற பெண் தனது 70-வது பிறந்த நாளையொட்டி நேஷனல் லொத்தரியில் பரிசுசீட்டு வாங்கி கொண்டாடியுள்ளார்.

அவருக்கு அந்த லொத்தரி சீட்டில் மெகா பம்பர் பரிசாக ஒவ்வொரு மாதமும் 10 ஆயிரம் பவுண்டுகள் (இந்திய மதிப்பில் சுமார் ரூ.10.37 லட்சம்) வீதம் 30 ஆண்டுகளுக்கு கிடைக்கும் என்ற வகையில் பரிசு கிடைத்துள்ளது.

பிரித்தானியாவில் மூதாட்டிக்கு லொத்தரியில் விழுந்த மிகப்பெரும் பரிசு தொகை! | Biggest Prize Lottery Fell To The Old Woman In Uk

இது தொடர்பான இ-மெயில் அவருக்கு வந்துள்ளது. முதலில் அந்த மெயிலை பார்த்த போது அவர் 10 பவுண்டுகள் மட்டுமே பரிசு வந்ததாக நினைத்துள்ளார்.

பிரித்தானியாவில் மூதாட்டிக்கு லொத்தரியில் விழுந்த மிகப்பெரும் பரிசு தொகை! | Biggest Prize Lottery Fell To The Old Woman In Uk

ஆனால் தொடர்ந்து அந்த மெயிலை வாசித்த போது தான் அவருக்கு 30 ஆண்டுகளுக்கு மாதம் 10 ஆயிரம் பவுண்டுகள் வெற்றி பெற்றுள்ளது தெரியவந்துள்ளது.

இந்த அதிர்ஷ்டத்தை தன்னால் நம்ப முடியவில்லை என கருதிய அவர் தனது மருமகனிடம் மெயிலை காட்டி பரிசு விழுந்ததை உறுதி செய்தார்.

மேலும் நேஷனல் லொத்தரியில் இருந்தும் அதிகாரபூர்வமாக அவருக்கு பரிசு விழுந்ததை உறுதிபடுத்திய டோரிஸ் ஸ்டான்பிரிட்ஜ் குடும்பத்தினருடன் கொண்டாடி மகிழ்ந்தார்.

இது தொடர்பில் டோரிஸ் ஸ்டான்பிரிட்ஜ் கூறுகையில்,

பிரித்தானியாவில் மூதாட்டிக்கு லொத்தரியில் விழுந்த மிகப்பெரும் பரிசு தொகை! | Biggest Prize Lottery Fell To The Old Woman In Uk

இந்த பரிசை பற்றி நினைக்கும் போதெல்லாம் விசித்திரமாக தோன்றுகிறது. 30 ஆண்டுகளுக்கு ஒவ்வொரு மாதமும் அந்த பணத்தை நான் பெறுவேன். இது எனக்கு 100 வயது வரை இருப்பதற்கான காரணத்தை அளிக்கிறது.

இந்த பரிசு தொகை மூலம் பழமையான எங்கள் வீட்டை புதுப்பிக்க திட்டமிட்டுள்ளோம் என்றார்.