நிலவில் ஆக்ஸிஜன் மற்றும் தனிமங்கள் – ஆடிப்போன உலக நாடுகள்!

0
300

நிலவின் தென் துருவத்தில் ஆக்சிஜன் உள்ளிட்ட 7 வகையான தனிமங்கள் இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது.

சந்திரயான் -3

615 கோடி மதிப்பீடில் சந்திரயான் – 3 விண்கலத்தை இஸ்ரோ வடிவமைத்த நிலையில் கடந்த ஜூலை 14ஆம் தேதி விண்ணில் ஏவியது. சந்திரயான் -3 இல் உள்ள உந்துவிசைத் தொகுதியில் இருந்து ‘விக்ரம் லேண்டரை’ வெற்றிகரமாக தனியாக பிரித்தனர்.

இந்நிலையில், லவின் தென் துருவத்தில் ஆய்வு மேற்கொண்டு வரும் ரோவரில் உள்ள Laser-Induced Breakdown Spectroscope (LIBS) என்ற கருவியி நிலவின் மேற்பரப்பில் சல்பர் இருப்பதை சந்தேகத்திற்கு இடமின்றி உறுதி செய்துள்ளது.

இஸ்ரோ உறுதி

மேலும் அலுமினியம், கால்சியம், இரும்பு, குரோமியம், டைட்டானியம், மங்கனிசு, சிலிக்கான் மற்றும் ஆக்சிஜன் இருப்பதை ஏற்கெனவே எதிர்பார்த்தபடி உறுதி செய்துள்ளது. தொடர்ந்து, ஹைட்ரஜனை தேடும் பணி நடந்து வருவதாக எக்ஸ் சமூகவலைத்தள பக்கத்தில் இஸ்ரோ தெரிவித்துள்ளது.

தனிமங்களை கண்டுபிடித்த LIBS- என்ற கருவி பெங்களூருவில் இஸ்ரோவில் உள்ள எலக்ட்ரோ-ஆப்டிக்ஸ் சிஸ்டம்ஸ் (LEOS ஆய்வகத்தில் உருவாக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.