கிழக்கு மாகாண ஆளுநருக்கு அதிகாரம் இல்லை!

0
178

அனுமதியளிக்கப்பட்ட விகாரை பகுதிக்குள் செல்வதற்கு தடை விதிக்கும் அதிகாரம் மாகாண ஆளுநருக்கு இல்லை, ஆகவே சீலவங்ச தேரர் அந்த விகாரைப் பகுதிக்குள் பிரவேசிக்கலாம், வசிக்கலாம். அதற்கு தடையேதும் இல்லை என புத்த சாசனம் மற்றும் மத விவகாரங்கள் அமைச்சர் விதுர விக்ரமநாயக்க தெரிவித்துள்ளார்.

பொரலுகந்த ரஜமஹா விகாரைக்கு சட்டபூர்வமாக விகாரை ஒன்று அமைக்க அனுமதி வழங்கியுள்ள நிலையில் அம்பிட்டியே சீலவங்ச திஸ்ஸ தேரர் அந்த காணிக்குள் பிரவேசிப்பதற்கு தடை விதிக்கும் வகையில் கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் நகரங்கள், பட்டிணங்கள் சபையின் செயலாளரிடம் தடையுத்தரவு விதிக்குமாறு கோரியுள்ளார்.

மாகாண ஆளுநருக்கு இந்த அதிகாரம் உள்ளதா என நாடாளுமன்றத்தில் சுயாதீனமாகச் செயற்படும் எதிரணியின் உறுப்பினர் அத்துரலியே ரதன தேரர் புத்தசாசனம் மற்றும் மத விவகாரங்கள் அமைச்சரிடம் கேள்வி எழுப்பினார்.

இதற்கு பதிலளிக்கும் போதே புத்தசாசனம் மற்றும் மத விவகாரங்கள் அமைச்சர் விதுர விக்ரமநாயக்க இவ்வாறு தெரிவித்துள்ளார்.