யாழ்ப்பாணம், முல்லைத்தீவில் சரத் வீரசேகரவுக்கு எதிராக போராட்டம்!

0
263

நாடாளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர ஆற்றிய உரையை கண்டித்து யாழ்.நீதிமன்ற முன்றலில் இன்றைய தினம் (25.08.2023) சட்டத்தரணிகளால் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

முல்லைத்தீவு – நீதிமன்ற நீதிபதி குறித்து அவதூறாக கருத்து வெளியிடுவது நீதித்துறைச் சுதந்திரத்தை கேள்விக்குட்படுத்தும் வகையிலும் நாடாளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர ஆற்றிய உரையை கண்டித்து இப்போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

சரத் வீரசேகரவுக்கு எதிராக யாழ்ப்பாணம், முல்லைத்தீவில் போராட்டம் | Lawyers Protest In Jaffna

முல்லைத்தீவிலும் போராட்டம்

அதேவேளை சரத் வீரசேகரவின் கருத்தினை கண்டித்து முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்றம் முன்பாக நீதிமன்ற நடவடிக்கைகளை புறக்கணித்து அடையாள கண்டன போராட்டம் ஒன்று சட்டத்தரணிகளால் முன்னெடுக்கப்பட்டிருந்தது.

அடையாள கண்டனப் போராட்டமானது இன்று 25.08.2023 காலை 9.30 மணி முதல் 10.30 மணிவரை நீதிமன்ற நடவடிக்கைகளை புறக்கணித்து இடம்பெற்றிருந்தது.

சரத் வீரசேகரவுக்கு எதிராக யாழ்ப்பாணம், முல்லைத்தீவில் போராட்டம் | Lawyers Protest In Jaffna

போராட்டத்தில் கௌரவ நீதிபதிகளின் கடமையில் தலையிடாதே, சுயாதீனமான நீதித்துறையின் செயற்பாட்டை உறுதி செய்யுங்கள், நீதித்துறையின் சுதந்திரத்திற்கு களங்கத்தை ஏற்படுத்தாதே, பாராளுமன்ற சிறப்புரிமையை துஷ்பிரயோகம் செய்யாதே, கௌரவ நீதிபதிகளின் கட்டளைகளுக்கு மதிப்பளி போன்ற பல்வேறு வாசகங்கள் தாங்கிய பதாதைகளை தாங்கியவாறு போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.

சரத் வீரசேகரவுக்கு எதிராக யாழ்ப்பாணம், முல்லைத்தீவில் போராட்டம் | Lawyers Protest In Jaffna
Gallery
Gallery
Gallery
Gallery
Gallery
Gallery