உடல் எடையை குறைக்க உதவும் கொடம்புளி, கொள்ளு!

0
241

உடல் எடையை குறைப்பதற்கு மருந்து, மாத்திரைகள் உண்பது, அறுவை சிகிச்சை போன்றவற்றை செய்வதை முற்றிலும் தவிர்க்க வேண்டும்.

இதற்கு பதிலாக சத்தான உணவுகள் மற்றும் உடற்பயிற்சிகளை மேற்கொள்ள வேண்டும்.

இயற்க்கை முறையில் உடல் எடையை குறைக்க கொடம்புளி கொள்ளு சூப் செய்து சாப்பிட்டு வந்தால் உடல் எடை வாரத்திற்கு 3-4 கிலோ வரை குறைக்கலாம்.

rachna cooks

கொடம்புளி மற்றும் கொள்ளு

கொடம்புளி கேரளாவில் தான் அதிகமாக பயன்படுத்தப்படுகிறது. உயர் கொலஸ்டிரால் பிரச்சினை உள்ளவர்கள் இதை எடுத்துக் கொள்ளும்போது உடலில் உள்ள கெட்ட கொழுப்புகள் வெளியேறி இதய நோய் ஆபத்து ஏற்படாமல் தவிர்த்துக் கொள்ள முடியும்.

கொழுத்தவனுக்கு கொள்ளு என்று சொல்வார்கள்.உடலில் உள்ள கெட்ட கொழுப்புகளை கரைத்து உடல் எடையை குறைப்பதில் கொள்ளு முக்கிய பங்காற்றுகிறது.

kollu soup/ கொள்ளு சூப்

உடல் எடையை குறைக்க முக்கிய பங்காற்றும் இந்த கொடம்புளி ,கொள்ளை பயன்படுத்தி சூப் செய்து சாப்பிட்டு வந்தால் உடல் எடையை இயற்கை முறையில் குறைக்கலாம.கொடம்புளி கொள்ளு சூப் செய்வது பற்றி பார்ப்போம்.

தேவையான பொருட்கள்

  • கொள்ளு – 1ஸ்பூன்
  • பூண்டு பற்கள் – 2
  • கொடம்புளி – பாதி நெல்லிக்காய் அளவு
  • உப்பு – 2 சிட்டிகை அளவு
  • கறிவேப்பிலை – 10 இலைகள்

செய்முறை

அடுப்பில் கடை வைத்து கொள்ளு பயிரை நன்கு வாசனை வரும்வரை வறுத்து எடுத்துக்கொள்ளவும்.

நன்கு வருத்தவுடன் அதில் கருவேப்பிலை சேர்த்து வறுத்து எடுத்துக்கொள்ளவும்.

அது ஆரிய பின்பு மிக்ஸியில் சேர்த்து பொடியை அரைத்துக்கொள்ளவும்.

kollu soup/ கொள்ளு சூப்

கொடம்புளியை முன்னாடி நாள் இரவே 1/2 டம்ளர் தண்ணீரில் ஊறவைத்து எடுத்துக்கொள்ளவும்.

ஒரு கடாயில் ஊறவைத்த புளியை கரைத்து வடிகட்டி புளி தண்ணீரை ஊற்றி ,அதில் மேலும் 2 டம்ளர் தாண்ணீர் கொதிக்கவிடவேண்டும்.

அதில் நசுக்கிய பூண்டையும் , கொள்ளு பொடியையும் சேர்த்து,தேவையான அளவு உப்பு சேர்த்து கொதிக்கவிட்டு எடுத்தல் கொடம்புளி கொள்ளு சூப் தயார்.