சிறுநீரக கற்களை போக்க இயற்கை பானம்! வீட்டிலேயே தயாரிக்கலாம்.

0
79

சிறுநீரகத்தில் உள்ள கற்கள் உடலுக்கு கேடு விளைவிக்கக்கூடியவை.

அதில் பெரும்பாலானோர் அறுவைசிகிச்சை செய்ய வேண்டிய நிலையில் இருக்கிறார்கள். மேலும் கடுமையான மருந்துகளை எடுத்துக்கொள்கிறார்கள்.

இந்த வலி மிகுந்த நோய்க்கு சிகிச்சை கடுமையாக இருக்கும். இந்த நோயை குணப்படுத்த வீட்டிலேயே எளிய முறையில் இயற்கை பானம் தயாரித்து குடிக்கலாம்.

kidney stone/சிறுநீரக கற்கள்

இதில் உள்ள சில நன்மைகள் சிறுநீரக ஆரோக்கியத்துக்கு உதவுகின்றன. இயற்கையில் கிடைக்கும் பானம் என்பதால் உடலுக்கு எவ்வித பக்கவிளைவுகளையும் ஏற்படுத்துவதில்லை.

தேங்காய் தண்ணீரை பயன்படுத்தி செய்யும் இந்த இயற்கை பானம் ஒரு நாளில் பலமுறை குடிப்பதன் மூலம், சிறுநீரக கற்களை போக்க முடியும்.

அதிக அளவில் தேங்காய் தண்ணீர் குடிக்கும்போது, அடிக்கடி சிறுநீர் கழியும். இதில் உள்ள பொட்டாசியம் ஆசிட் கலந்த சிறுநீரை வெளியேற்றி, கற்களை கரைக்கிறது.

coconut water/தேங்காய் தண்ணீர்

தேவையான பொருட்கள்

  • தேங்காய் தண்ணீர் – 1 கப்
  • எலுமிச்சை – அரைப்பழம்
  • வெள்ளரி – கால் (தோல் சீவி துருவியது)
  • இஞ்சி – கால் ஸ்பூன்
  • புதினா இலை – ஒரு கைப்பிடி

செய்முறை

ஒரு மிக்ஸி ஜாரில், தேங்காய் தண்ணீர், எலுமிச்சை சாறு, வெள்ளரி துண்டுகள், இஞ்சி மற்றும் புதினா ஆகியவற்றை சேர்த்து நன்றாக அரைத்துக்கொள்ள வேண்டும்.

இதை நன்றாக வடித்து எடுத்துக்கொள்ள வேண்டும். ஒரு டம்ளரில் ஊற்றி அதில் புதினா இலைகள், நறுக்கிய, எலுமிச்சை சேர்த்து ஐஸ் கட்டிகள் தேவைப்பட்டால் போட்டு குடிக்கலாம்.

coconut water/தேங்காய் தண்ணீர்

இந்த பானத்தை எடுத்துக்கொள்ளும் முன் உங்கள் மருத்துவரின் பரிந்துரையை பெற்றுக்கொள்வது நல்லது. ஒரு வாரம் தொடர்ந்து இதை எடுத்துவர உங்களுக்கு சிறுநீர் வழியாகவே இந்த கற்கள் அனைத்தும் கரைந்து வந்துவிடும்.