மூல நோயுள்ளவர்கள் தினமும் இந்த சட்னியை சாப்பிடுங்கள்

0
253

இப்போதிருப்பவர்களுக்கு காரணமே இல்லாமல் பலவிதமான நோய்கள் வந்துக் கொண்டுதான் இருக்கிறது. அதில் மிக முக்கியமானது தான் இந்த மூல வியாதி.

இது சிறியவர் தொடங்கி பெரியவர் வரைக்கும் வயது வித்தியாசம் இல்லாமல் தாக்கி வருகின்றது. இந்த மூல வியாதி இருப்பவர்களுக்கு அரு மருந்தாக இருக்ககூடியது இந்த துத்தி இலை தான்.

இந்த துத்தி இலையைக் கொண்டு சட்னி செய்து சாப்பிட்டு வந்தால் விரைவில் குணமாகும். இந்த சட்னியை செய்தற்கு தேவையான பொருட்களும், செய்முறைப் பற்றியும் தற்போது பார்க்கலாம்.

மூல நோயை குணமாக்கும் சட்னி

தேவையான பொருட்கள்

  • துத்தி இலை
  • வெங்காயம்
  • தக்காளி
  • பூண்டு
  • இஞ்சி
  • பச்சை மிளகாய்
  • நல்லெண்ணெய்
  • சீரகம்
  • உளுந்து
  • மிளகு
  • தேங்காய்
  • கடுகு
  • கறிவேப்பிலை
மூல நோயை குணமாக்கும் சட்னி

செய்முறை

முதலில் ஒரு கடாயில் நல்லெண்ணெய் ஊற்றி சூடாக்கி 2 கரண்டி உளுந்து, ஒரு கரண்டி சீரகம், அரை கரண்டி மிளகு சேர்த்து நன்றாக வறுத்து கொள்ள வேண்டும்.

இவற்றை வறுத்து எடுக்கும் போது ஒரு துண்டு இஞ்சி, 10 பல் பூண்டு, சின்ன வெங்காயம், தக்காளி என்பவற்றை சேர்த்து நன்றாக வதக்கிக் கொள்ள வேண்டும்.

பின்னர் இரண்டு கரண்டி தேங்காய் துருவலை சேர்த்து அதனையும் வதக்கிக் கொள்ள வேண்டும். இவை அனைத்திற்கும் தேவையான அளவு உப்பு சேர்த்து வதக்கி ஆறிய பின்னர் மிக்சியில் சேர்த்து அரைத்துக் கொள்ள வேண்டும்.

பிறகு மற்றொரு பாத்திரத்தில் ஒரு கரண்டி நல்லெண்ணெய் ஊற்றி, கடுகு, உளுந்தம் பருப்பு, கறிவேப்பிலை சேர்த்து தாளித்து பின்னர் அரைத்து எடுத்துக் கொண்ட கலவையை சேர்த்தால் மூல வியாதியை குணப்படுத்தும் சட்னி தயார்.