யாழில் 17 வயது சிறுமியின் சடலம் மீட்பு: மரண விசாரணை அதிகாரி மீது குற்றச்சாட்டு

0
167

கடந்த சில வாரங்களுக்கு முன்னர் யாழ்ப்பாணம் – வட்டுக்கோட்டை முதலியகோவில் பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுமி ஒருவர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

அவரது மரணத்தில் சந்தேகம் எனவும், திடீர் மரண விசாரணை அதிகாரி சடலத்தை எரிக்குமாறு கூறியதாகவும் உயிரிழந்த சிறுமியின் உறவினர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

இது குறித்து திடீர் மரண விசாரணை அதிகாரி, அவர்களைத் தொடர்புகொண்டு கேட்டபோது சட்ட வைத்திய அதிகாரியின் அறிக்கையை வைத்தே நான் அவர்களுக்கு ஆலோசனை வழங்கினேன். சட்ட வைத்திய அதிகாரியின் அறிக்கையின்படி அது ஒரு தற்கொலை என கூறப்பட்டிருந்தது.

யாழில் 17 வயது சிறுமி சடலமாக மீட்பு: மரண விசாரணை அதிகாரி மீது குற்றச்சாட்டு | 17 Year Old Girl Was Found Dead In Jaffna

சட்ட வைத்திய அதிகாரியின் அறிக்கை

அத்துடன் சிறுமியின் தாயார் தனது பிள்ளையின் மரணத்தில் சந்தேகம் இல்லை என கூறியுள்ளார். இந்நிலையில் சிறுமியின் தாயார் சடலத்தை எரிப்பதா அல்லது புதைப்பதா என கேட்டுள்ளார்.

மரணத்தில் சந்தேகமும் இல்லை என கூறுகின்றீர்கள் சட்ட வைத்திய அதிகாரியின் அறிக்கையின்படி தற்கொலை என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆகையால் உங்களது சமய முறைப்படி எரிக்கலாம் அல்லது புதைக்கலாம். அது உங்களது விருப்பம் என கூறினேன் என தெரிவித்துள்ளார்.